12/13/2012

ஷீரடி சாய் பாபா



மகான் ஷீரடி சாய் பாபா அவதாரம்


இந்தியாவின் மகாராஷ்டிரா மாகாணத்தில் உள்ள ஷீரடி என்ற கிராமத்தில் அவதரித்த ஒரு மகான்.இவர் அந்த கிராமத்தில் 60 ஆண்டு காலம் வாழ்ந்துள்ளார்.இவர் எந்த நேரமும் ஒரு தெய்வீக மயக்க நிலையில் இருந்தார்.

ஒரு வேப்ப மரத்தடியில் தியானம் செய்வதும்,அலைந்து திரிந்து தன்னிச்சையாகவும் வாழ்ந்த மகான்.
 
இவரது தாய் தந்தை பற்றிய விவரங்கள் தெளிவாக தெரியவில்லை என தெரியவருகின்றது.இவர் இந்து மற்றும் இஸ்லாமிய திருவிழாக்களில் கலந்து கொண்டவர்.ஆனால் இவர் இந்து மதத்தை சார்ந்தவர் ஆவார். சிவபெருமானின் வாக்கின்படி ஸ்ரீ சாய் நாத் பிறந்ததாக கூறப்படுகிறது.
தெய்வீக அம்சமான சாய் நாத் ஒரு முஸ்லீமைப் போல உடை அணிதிருந்தாலும் இவரின் காதுகள் இரண்டும் துளைகள் இடப்பட்டிருந்தன.இந்த வழக்கம் "நாத்" பரம்பரையின் நடைமுறை வழக்கில் இருந்ததாக தெரிய வருகிறது.எனவே மகான் மச்சேந்திரநாத், கோரக்நாத், போன்ற அனைவரும் நாத் பரம்பரையை சார்ந்தவர்கள் என்று பேசப் படுகிறது.

இந்த இனத்தார் வட இந்தியா,நேபாளம்,காட்மாண்டு போன்ற இடங்களில் வாழ்ந்து வந்ததாக தெரியவருகிறது.ஸ்ரீ சாய் நாத்தின் ஷீரடியிலுள்ள புண்ணிய தளத்திற்கு தினந்தோறும் லட்சக்கணக்கில் பக்கதர்கள் வந்து தரிசித்துச் செல்கின்றனர்.ஆந்திரப் பிரதேசத்தில் மட்டும் 300 க்கும் மேற்பட்ட சாய் கோவில்கள் அமைந்துள்ளன.
 
இதுபோல் உலகில் பல்வேறு இடங்களிலும் பாபா விற்கு கோவில்கள் உள்ளன.அதேபோல் சென்னையில் மறைமலை நகருக்கு அருகிலுள்ள சட்ட மங்கலத்தில் உள்ள ஸ்ரீ ஷீரடி சாய் பாபா வழிபாட்டுத் தலம் அவதார புருஷர் பால யோகி பாலா சாய் அவர்கள் மூலம் சிறப்பாகச் செயல்ப்பட்டு வருகிறது.

சாய் அவர்களது வாழ்நாளில் இறப்பிற்கு முன்னும் பின்னும் உள்ள வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை.நிகழ்கால நிகழ்வுகளிலே மக்களின் வாழ்க்கை முறையில் முன்னேற்றம் ஏற்படுத்த அவர் விழைந்தார்.இவர் மக்களுக்கு பல்வேறு அற்புதங்களையும் ஆச்சர்யங்களையும் நிகழ்திக் காட்டியவர்.
 
கடைசி வரையிலும் தனக்கென்று எதையும் வைத்துக் கொள்ளதவர்.மனித ஆத்மாக்கள் தங்கள் கர்ம வினைகளில் இருந்து பல பிறவிகளில் இருந்தும் விடுபடுவதற்காக அவர்களை தம் பக்கம் இழுத்து உதவி செய்து அவர்களை பண்படுத்தி,ஆன்மிக வழியில் முன்னேற்ற மடைய செய்வதே பரம சத்குரு வான சாய் நாதனின் முக்கியப் பணியாக இருந்தது.

               எனவே சாயின் மகிமை அசுர வேகத்தில் இன்று உலகில் பரவிவருகிறது.அவரை நெருங்கி செல்ல அனைவரும் முயற்சி மேற்கொள்வோமாக ! ஷீரடி சாய் பாபா அவர்கள் 1918 ஆண்டு அக்டோபர் 15 இல் தனது பூத உடலை நீத்தார்.உயிர் நீத்த இடம் " சமாதி மந்திர் " என அழைக்கப்படுகிறது.

               பாபா தனது மறைவிற்கு பின்னும் தனது சமாதி பேசும் என்றும்,தன்னை அன்புடனும்,நம்பிக்கையுடனும் நினைக்கும் அன்பர்களுக்குத் தான் தொடர்ந்து நன்மை செய்வேன் என்றும் கூறியுள்ளார்.எனவே நாமும் ஒரு முறை ஷீரடி சென்று வர முயற்சி மேற்கொள்வோமாக !
 
  "ஓம் ஸாயி ஸ்ரீ ஸாயி ஜெய ஜெய ஸாயி"   





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக