3/15/2011

2ம் உலகப் போருக்குப் பின்னர் ஜப்பான்

2ம் உலகப் போருக்குப் பின்னர் ஜப்பான்
 
சுனாமி மீட்பு நடவடிக்கைகள்
சுனாமி மீட்பு நடவடிக்கைகள்
நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் சிக்கி சின்னா பின்னமாகியுள்ள ஜப்பான், இரண்டாம் உலக போருக்கு பின்னர் மிகப்பெரிய இக்கட்டான நிலையை சந்தித்துள்ளது தற்போது தான் என ஜப்பான் பிரதமர் நையடோ கான் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னரும் தாங்கள் இவ்வாறான பெரும் இக்கட்டான நிலையை சந்தித்துள்ளோம் என்றும் இவ்வாறான கடினமான தருணத்தில் நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் ஏற்பட்ட பாதிப்பின் தீவிரம் நன்கு புலப்பட ஆரம்பித்துள்ள தற்போதைய நிலையில், கிட்ட தட்ட பத்தாயிரம் பேர் பலியாகியிருக்கலாம் என ஜப்பான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுனாமி அலைகளால் ஏராளமான பகுதிகள் பாதிக்கப்பட்ட செண்டாய் நகரத்தில் முற்றிலுமான அழிவுகளை தாங்கள் பார்க்கக்கூடியதாக இருப்பதாக மீட்பு பணியாளர்கள் கூறுகின்றனர்.
எனினும், ஜப்பானில் நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் கடும் மின் தடை ஏற்பட்டுள்ள நிலையில், மின் தட்டுப்பாடு தொடரும் என ஜப்பான் வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சர் பான்ரி கையிடா தெரிவித்துள்ளார்.
இதனை தொழிற்துறையினரும், பொது மக்களும் இத்தகைய காலக்கட்டத்தில் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதற்கிடையே, நிவாரண மற்றும் மீட்பு பணியில் உதவுவதற்கு ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ஹங்கேரி, தாய்வான், சீனா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் ஜப்பானுக்கு விரைந்துள்ளனர்.
BBC Tamil news.

ஜப்பான் நாடு இந்த நிலையீல் இருந்து மீள நாம் ப்ரார்த்தனை செய்வோம். 
Partha, Pondicherry.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக