கவலைப்படாமல் விளையாடிக்கொண்டிருப்பதுதான்
பிரபஞ்சம்
ஆனால் மனிதன் ,தன் வாழ்வில்
வேலை செய்வதைத்தவிர எதையும் செய்வதில்லை
இதனால் அவனுக்கு எல்லாமே தலைகீழாகிவிடுகின்றது
அதனால்தான், அவனுக்கு வேதனைகள்.
பிரபஞ்சத்தின் தாவோ, பிரபஞ்ச விதி
ஒரு லீலை-ஒரு விளையாட்டு.
மனிதப் பகுத்தறிவிற்கு எட்டியது,வேலைதான்.
ஏனென்றால், பயன் கருதாமல்,அதற்கப்பால்
சிந்திக்க பகுத்தறிவால் முடியாது.
ஆனால்,இருத்தல்,இருப்பது,பயன்பாட்டுக்கு அப்பால்
இந்த இடைவெளி பற்றி ஆழமாக் யோசி.
உனக்கு பாலம் கிடைக்கும்-
பாலம் அவசியம்.
ஏனென்றால் வேலையின்றி வாழ்வும் முடியாது.
வேலைக்காக மட்டும் வாழ்வது சகிக்க முடியாதது;
அது வாழ்வே அல்ல.
தியானிப்பவன் வேலையும் செய்வான்
ஆடிப்பாடியும் மகிழ்வான் –
வேலை செய்வதே அவனுக்கு விளையாட்டு-
அதனால்தான அப்படி.
தியானமற்றவன் விளையாடலாம்,வேலை செய்யலாம்.
அவன் விளையாடுவதே
வேலை செய்யத்தான்.
--ஓஷோ (இரண்டாவது கோப்பைத் தேநீர்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக