9/30/2010

வெற்றியின் ரகசியம் ( sucess )

ஓர் இளைஞன் சாக்ரடீஸிடம் வந்து வெற்றிக்கான இரகசியத்தைப் பற்றிக் கேட்டான்.

அதற்கு சாக்ரடீஸ் மறுநாள் காலை ஆற்றங்கரைக்கு வருமாறு கேட்டுக் கொண்டார்.

மறுநாள் காலை ஆற்றங்கரையில் இருவரும் சந்தித்துக் கொண்டனர்.

சாக்ரடீஸ் அந்த இளைஞனை ஆற்றை நோக்கி உள்ளே வரும்படி கேட்டுக் கொண்டார்.

கழுத்தளவு நீர் வரை உள்ளே வந்தவுடன் அந்த இளைஞனை நீரினுள் வைத்து அமுக்கினார்.

அவன் வெளியே வர முயற்சி செய்தான்.

ஆனாலும் அவனை அப்படியே அமுக்கியவாறு அவனது முகம் நீல நிறமாக மாறும் வரை வைத்திருந்தார்.

சற்றுப் பொறுத்து அவனது தலையை நீரினுள்ளிருந்து வெளியே இழுத்தவுடன் அந்த இளைஞன் செய்த முதல் வேலையே தன்னால் இயன்ற அளவு காற்றை மீண்டும் மீண்டும் உள்ளிழுத்தான்.

சாக்ரடீஸ் அவனிடம் “நீ நீருக்குள் இருந்த போது நீ எதை அதிகம் விரும்பினாய்?” என்று கேட்டார்.

அந்த இளைஞன் “காற்று” என்று பதிலளித்தான்.

சாக்ரடீஸ், “வெற்றியின் இரகசியமே அது தான் .நீ எவ்வளவு அதிகமாக காற்றை விரும்பினாயோ அது போன்றே வெற்றியையும் விரும்பினால் உனக்கு அது கிட்டும்” என்று சொன்னார்.

இதைத் தவிர வேறு எந்த ரகசியமும் இல்லை.

தொகுப்பு :- Sarathi

9/28/2010

நவராத்திரி

ஒரு மனிதனிற்கு உடல்வலிமை, பராக்கிரம், மனோதிடம், புத்திபலம், தீர்க்காயுள், ஞானம் தேவகளிற்கு பணம் போன்ற அனைத்து அம்சமும் நிறைந்திருந்தால் தான் அவன் சிறந்த வெற்றியாளனாக திகழ முடியும். அதாவது வீரம், செல்வம், கல்வி ஆகியவை இனைத்தும் நிறைந்திருக்க வேண்டும். இவற்றை பெறுவதற்காகவே நவராத்திரி விரதம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. நவ என்ற சொல்லிற்கு ஒன்பது, புதியது என்ற இரண்டு அர்த்தங்கள் உள்ளன. இங்கு ஒன்பது ராத்திரிகள் என்பதே நவராத்திரி எனபபபடுகிறது. ஒன்பது ராத்திரிகள் சக்தியை நோன்பு நோற்று வழிபட்டு 10ம் நாள் நோன்பை நிறைவு செய்ய வேண்டும். உத்தராயண காலமான தை முதல் ஆனி வரையிலான காலத்தின் நடுவில் வருவது வசந்த ருது -- சித்திரை, தட்சிணாயண காலமான ஆடி முதல் மார்கழி வரையிலான காலத்தின் நடுப்பகுதியான சரத் ருது -- புரட்டாசி. இவ்விரு பருவ காலங்களும் எமனின் கோரைப்பற்களைக் குறிக்கின்றன. இக்காலங்கள் பொதுவாக மனிதரிற்கு தீமை விளைவிக்கும் காலங்களாகும். இதனால் தான் இக் காலங்களில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடத்தப்படுவதில்லை. இந்த ஒன்பது நாட்களும் முப்பெரும் தேவியரான மலைமகள் (துர்க்கை), அலைமகள் (மகாலட்சுமி), கலைமகள் (சரசுவதி) ஆகியோரிற்கு மும்மூன்று நாடகளாக வழிபடும் ஒரு முறையும் உள்ளது. மற்றும் ஒன்பது சக்தியிரை ஒன்பது நாட்கள் வழிபடும் முறையம் உள்ளது. ஈழம் போன்ற நாடுகளில் முதல் முறையே கடைப்பிடிக்கப்படுகிறது. பண்டைய காலத்தில் மன்னர்கள் மற்றும் படைவீரர்கள் ஒன்பது நாட்களும் தங்கள் ஆயுதங்களை (போர்க் கருவிகளை) பூசையில் வைத்து பத்தாம் நாள் விஜய தசமியன்று விழா எடுத்து தமது வெற்றிக்கு தமது ஆயுதங்களிற்கு சிறப்பு சக்தி கிடைக்க வேண்டும் என வழிபட்டு வந்தனர். இதற்கு சான்று கிருஷ்ண அவதாரத்தில் கம்சனின் படலத்தில் காணப்படுகிறது. நவராத்திரி கொலு வைக்கும் முறையையும், ஒன்புது தேவியரின் வழிபாட்டு முறையையும் இனிப்பார்ப்போம்
நவராத்திரி கொலு
                      நவராத்திரியின் சிறப்பு அம்சம் கொலு வைப்பதேயாகும். கொலு என்பது பல படிகளை கொண்ட மேடையில் பலவித பொம்மைகளை நேர்த்தியாக அலங்கரித்து வைப்பதேயாகும். ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணினால் செய்யப்பட்ட பொம்மைகளை சக்தியின் அம்சங்களாக எண்ணி நவராத்திரியில் பூசிப்பவர்களிற்கு சகல நலங்களையும் தருவேன் என்று அம்பிகையே கூறியிருக்கின்றா. இனி நவராத்திரி கொலு எப்படி அமைக்கவேண்டும் என்று பார்ப்போம். கொலுமேடை 9 படிகள் கொண்டதாக இருக்கவேண்டும்.

    1. முதலாம் படி :-
                     ஓரறிவு உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவர                       வர்கங்களின் பொம்மைகள்.
    2. இரண்டாம் படி:-
                     ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள்.
    3. மூன்றாம் படி :-
                    மூன்றறிவு உயிர்களான கறையான், எறும்பு போன்றவற்றின் பொம்மைகள்.                                
    4. நாலாம்படி :-
                    நான்கறிவு உயிர்களை விளக்கும் நண்டு,வண்டு  போன்றவற்றின் பொம்மைகள்.
    5. ஐந்தாம்படி :-
                   ஐந்தறிவு உள்ள மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றின் பொம்மைகள
  
6. ஆறாம்படி :-
                   ஆறறிவு மனிதர்கள் பொம்மைகள்.
   7. ஏழாம்படி :-
                   மனித நிலையிலிருந்து உயர் நிலையை அடைந்த    சித்தர்கள், ரிசிகள், மகரிசிகள் (ரமணர், வள்ளலார்) போன்றோரின் பொம்மைகள்.    8. எட்டாம்படி :-
                  தேவர்கள், அட்டதிக்பாலர்கள், நவக்கிரக அதிபதிகள் போன்ற தெய்வங்கள் தேவதைகள் போன்றோரின் பொம்மைகள்.
  
9. ஒன்பதாம்படி :-
                   பிரம்மா, விட்ணு, சிவன் ஆகியோர் அவர்களின் தேவியருடன் நடுநாயகமாக ஆதிசக்தி வைக்கவேண்டும்.
 
மனிதன் படிப்படியாக உயர்ந்து தெய்வ நிலையை அடைய வேண்டும் என்பதற்காகவே இப்படி கொலு அமைப்பது வழக்கம்.

                       
நவராத்திரி வழிபாட்டு முறை.
1. முதலாம் நாள் :-
          
சக்தித்தாயை முதல்நாளில் சாமுண்டியாக கருதி வழிபடவேண்டும். தெத்துப்பல் திருவாயும், முண்டமாலையும் அணிந்தவள். முண்டன் என்ற அசுரனை சம்ஹாரம் செய்த சக்தி அவள். இதனால் சாமுண்டா எனவும் அழைப்பர். இவள் மிகவும் கோபக்காரி. நீதியைக்காக்கவே இவள் கோபமாக உள்ளாள்.
             முதல்நாள் நைவேத்தியம் :-சர்க்கரைப் பொங்கல்.
2. இரண்டாம் நாள் :-
             இரண்டாம் நாளில் அன்னையை வராஹி தேவியாக கருதி வழிபட வேண்டும். வராஹ(பன்றி) முகமும் தெத்துபற்களும் உடையவள். சூலமும் உலக்கையும் ஆயுதங்கள் ஆகும். பெரிய சக்கரத்தை தாங்கியிருப்பவள். தனது தெத்து பற்களால் பூமியை தூக்கியிருப்பவள். இவளிற்கு மங்கள மய நாராயணி, தண்டினி, பகளாமுகி போன்ற திருநாமங்களும் உண்டு. இவள் அன்னையின் சேனாதிபதி ஆவாள்.
             இரண்டாம் நாள் நைவேத்தியம் :- தயிர்ச்சாதம்.
3. மூன்றாம் நாள் :-
             மூன்றாம் நாளில் சக்தித்தாயை இந்திராணியாக வழிபடவேண்டும். இவளை மாஹேந்தரி, சாம்ராஜ தாயினி என்றும் அழைப்பர். இவள் இந்திரனின் சக்தி ஆவாள். கிரீடம் தரித்து வஜ்ராயுதம் ஏந்தியவள். ஆயிரம் கண்ணுடையவள். யானை வாகனம் கொண்டவள். விருத்திராசுரனை
அழித்தவள். தேவலோகத்தை பரிபாலனம் செயபவளும் இவளேயாகும். பெரிய பெரிய பதவிகளை அடையவிரும்புபவர்களிற்கு இவளின் அருட்பார்வை வேண்டும்.
            மூன்றாம் நாள் நைவேத்தியம் :- வெண்பொங்கல்.
4. நான்காம் நாள் :-
           
சக்தித்தாயை இன்று வை~;ணவி தேவியாக வழிபடவேண்டும். சங்கு, சக்கரம், கதை, வில் ஆகியவற்றை கொண்டிருப்பவள். தீயவற்றை சம்ஹரிப்பவள். இவளின் வாகனம் கருடன்.
         
  நான்காம் நாள் நைவேத்தியம் :- எலுமிச்சை சாதம்.5. ஐந்தாம் நாள் :-
           
ஐந்தாம் நாளில் அன்னையை மகேஸ்வரி தேவியாக வழிபட வேண்டும். அன்னை மகேஸ்வரனின் சக்தியாவாள். திரிசூலம், பிறைச்சந்திரன், பாம்பு தரித்து இடப வாகனத்தில் எழுந்தருளியிருப்பவள். அளக்கமுடியாத பெரும் சரீரம் உடையவள். சர்வ மங்களம் தருபவள். தர்மத்தின் திருவுருவம். கடின உழைப்பாளிகள் உழைப்பின் முழுப்பலனை பெற அன்னையின் அருள் அவசியம் வேண்டும்.
           
ஐந்தாம் நாள் நைவேத்தியம் :- புளியோதரை.6. ஆறாம் நாள் :-

           
இன்று அன்னையை கவுமாரி தேவியாக வழிபடவேண்டும். மயில் வாகனமும் சேவல் கொடியும் உடையவள். தேவசேனாதிபதியான முருகனின் வீரத்திற்கு ஆதாரமானவள். ஓங்கார சொரூபமானவள். சகல பாவங்களையும் விலக்கிடுபவள். வீரத்தை தருபவள்.
        
ஐந்தாம் நாளநைவேத்தியம் :- தேங்காய்ச்சாதம்.7. ஏழாம் நாள் :-
        
ஏழாம்நாள் அன்னையை மகாலட்சுமியாக வழிபடவேண்டும். கையில் ஜெபமாலை, கோடரி, கதை, அம்பு வில், கத்தி, கேடயம், சூலம், பாசம், தண்டாயுதம், சக்தி ஆயுதம், வஜ்ராயுதம், சங்கு, சக்கரம், மணி, மதுக்கலயம், தாமரை, கமண்டலம் ஆகியவற்றைக் கொண்டிருப்பவள். வீ~;ணு பத்தினியாவாள். பவளம் போன்ற சிவந்த நிறத்தையுடையவள். தாமரை ஆசனத்தில் அமர்ந்து சகல ஐசவரியங்களையும் தருபவள் அன்னையாகும்.
           ஏழாம் நாள் நைவேத்தியம் :- கல்க்கண்டுச் சாதம்.8. எட்டாம் நாள் :-
          
இன்று அன்னையை நரசிம்ஹி ஆக வழிபடவேண்டும். மனித உடலும், சிம்ம தலையும் உடையவள். கூரிய நகங்களுடன் சங்கு, சக்கர தாரிணியாக சிம்ம வாகனத்தில் காட்சி தருபவள். சத்ருக்கள் தொல்லையில் இருந்து விடுபட அன்னையின் அருள்வேண்டும்.
        
எட்டாம் நாள் நைவேத்தியம் :- சர்க்கரைப் பொங்கல்.
9. ஒன்பதாம் நாள் :-
          
இன்று அன்னையை ப்ராஹ்மி ஆக வழிபடவேண்டும். அன்ன வாகனத்தில் இருப்பவள். வாக்கிற்கு அதிபதியாவாள். ஞானசொரூபமானவள். கல்விச்செல்வம் பெற அன்னையின் அருள் அவசியமாகும்.
         ஒன்பதாம் நாள் நைவேத்தியம் :- அக்கர வடசல்.
SARATHI, SAUDI ARABIA.

9/27/2010

365 நாளும் வாழ வழி

வருடத்தில் 365 நாளும் வாழ வழி (HOW TO LIVE 365 DAYS A YEAR) என்ற தனது புத்தகத்தில் பிரபல அறிஞர் ஜான் ஏ. ஷிண்ட்லர் "உணர்ச்சிகளால் தூண்டப்படும் நோய்களை அறவே விரட்ட வேண்டும்" என்று அறிவுரை பகர்கிறார்.

சீரான வாழ்க்கை அமைந்திருந்தால் அதைத் தொடர்ந்து அனுபவியுங்கள். கரடுமுரடான வாழ்க்கை நிலை ஏற்பட்டால் நான்கு வழிகளை மனதில் கொள்ளுங்கள் என்று கூறும் அவர் நான்கு வழிகளை முறைப்படுத்தி கூறுகிறார்.

1. முதலில் எவ்வளவு மோசமான நிலையாக இருந்தாலும் வெளிப்படையாக அமைதியுடன் இருங்கள். முடிந்தால் நகைச்சுவையுடன் நிலைமையை எதிர் கொள்ளுங்கள் (இடுக்கண் வருங்கால் நகுக)

2. சினிமா பிலிம் போல உங்களுக்கு நேர்ந்த அவல நிலையை திருப்பித் திருப்பி மனத்திரையில் ஓட்டிப் பார்க்காதீர்கள். தன்னிரக்கப்படவே கூடாது.

3. தோல்வியை எப்படி வெற்றியாக மாற்ற முடியும் என்று பாருங்கள். சமநிலை, தைரியம், மகிழ்ச்சி போன்ற பண்புகளால் உங்கள் தோல்வியை சமாளித்த நீங்கள் வெற்றி பெறும் நிலையை பார்த்து அனைவரும் வியப்படைவர்.

4. கீழ்க்கண்ட கொடிகளை உங்கள் மனம் என்னும் கோட்டையில் பறக்க விடுங்கள்.

சமநிலை: (அமைதியுடன் இருப்பேன்)

வருவது வரட்டும்: (இந்த தற்காலிக சரிவை ஏற்றுக் கொள்வேன்)

தைரியம்: (இது மட்டுமல்ல; இனிவரும் தோல்விக்கும் தயார்)

மலர்ச்சி: (இந்த தோல்வியை வெற்றியாக மாற்றியே தீருவேன்)

மகிழ்ச்சி: (இன்னும் நல்ல முறையில் எல்லா மனிதரையும் அணுகுவேன்)
  
நன்றி:- ச.நாகராஜன், Nilacharal.

நேர நிர்வாகம் (TIME MANAGEMENT)

குறித்த நேரத்தைக் கடைப்பிடித்தல்

குறித்த நேரத்தைக் கடைப்பிடித்தல் என்பது ஒரு அரிய தேவையான குணமாகும். அதுவும் இந்த எலக்ட்ரானிக் யுகத்தில் தகவல் பரிமாற்றங்கள் மின்னல் வேகத்தில் இண்டர்நெட் மூலமாகவும் பேக்ஸ் மூலமாகவும் பரவும் போது குறித்த நேரம் என்பது மிக்க அர்த்தம் உள்ளதாக ஆகிறது.

போட்டி மயமான உலகில் முந்தியவருக்கே முதலிடம் என்ற நிலையில் குறித்த நேரத்தைக் கடைபிடிக்காதவருக்கு பண இழப்பும் தோல்வியும் தவிர்க்க முடியாததாகி விடுகிறது. வெற்றிகரமான வியாபாரத்தின் ஆத்மாவே குறித்த நேரம் தான் என்பர் அறிஞர்.

நேர நிர்வாகம்

நேரத்தை நிர்வகிப்பது எப்படி (TIME MANAGEMENT) என்பது ஒரு பெரிய நிர்வாக இயலாக மாறி வருகிறது. நமக்கென கிடைக்கும் மாலை நேரங்களை - அதாவது வேலைக்குப் பிறகு உள்ள நேரத்தை எப்படிக் கழிப்பது என்பதை சிந்தனை செய்து வரையறுத்துக் கொள்ளல் இன்றியமையாதது.

1. தனிப்பட்ட நேரம்

அமைதியாக ஒரு இடத்தில் உட்கார்ந்து உள்ளார்ந்த சிந்தனையில் ஈடுபடுவது முழு வாழ்க்கை வாழ்ந்த அளவிற்கான அனுபவத்திற்குச் சமமாகும். நமது உள்ளார்ந்த சக்திகளை, திறமைகளை வெளிப்படுத்த தேவையான முயற்சிகளை பற்றி எண்ணிப் பார்க்க இந்த மாலை நேரம் உதவ முடியும்.

நம்மை பாதிக்கும் விஷயங்களில் எதிர் விளைவுகளைப் பற்றி சிந்தித்து செயலாற்றுவதை விட்டுவிட்டு நாம் முன்னேற உதவும் செயல்களை நினைத்து உந்துதலுடன் செயலாற்ற ஆரம்பிக்க வேண்டும்.

2. மனைவி மக்களுக்காக

மனைவியுடனும், குடும்பத்துடனும் தினமும் சற்று நேரம் செலவழிப்பது, வார இறுதியில் வெளியிடங்களுக்குச் செல்வது - இவையெல்லாம் இன்றியமையாத குடும்பப் பிணைப்பை வலுவுள்ளதாக ஆக்கும்.

3. வேலைக்காக

செய்யும் தொழிலில் திறமைகளை வளர்ப்பதற்காக சிறிது நேரம் ஒதுக்க வேண்டும். எந்த வேலையையும் இன்னும் சற்று சிறப்பாகச் செய்ய வழியுண்டு. அந்த வழியைக் காண நேரம் ஒதுக்க வேண்டும்.

4. உடல் நலம்

காலை, மாலையில் நடைப்பயிற்சி, தினமும் சிறிது தேகப்பயிற்சி இவற்றிற்காக 30 நிமிட நேரம் ஒதுக்குதல் நலம். நல்ல உணவுப் பழக்கம், குறித்த நேரத்தில் சாப்பிடுதல் இவற்றால் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

5. நிதி நிலை

அன்றாடம் செய்த வரவு செலவுக் கணக்கைச் சரி பார்க்க சிறிது நேரம் ஒதுக்க வேண்டும். வரி செலுத்துதல், பண முதலீடுகளைப் புதுப்பித்தல், பட்ஜெட் திட்டமிடல் இவற்றிற்கு உரிய நேரம் ஒதுக்குதல் வேண்டும்.

6. சமூக உயர்வு

நாம் வாழும் குடியிருப்பை மேம்படுத்த நமக்கு ஒரு கடமை உண்டு. அதற்கு வாரம் சிறிது நேரம் ஒதுக்குவதோடு, ஏழை மக்களின் நிலை உயர்வதற்காக முயற்சி செய்ய சிறிது நேரம் தருவதும் இந்த சமுதாய கடமையில் அடங்கும். இதில் ஏற்படும் ஆத்ம திருப்திக்கு ஈடு இணை இருக்க முடியாது.

7. ஆன்ம வளர்ச்சி

உள்ள வலிமைக்கு ஆன்மீக வளர்ச்சியே அடிப்படை. இறை நம்பிக்கையோடு பிரார்த்தனை, குடும்பத்தார் விரும்பும் சடங்குகள் இவற்றிற்கு உரிய மதிப்பு தருவதோடு தனது ஆத்ம முன்னேற்றத்திற்கும் நேரம் ஒதுக்குதல் இன்றியமையாதது.

இப்படி தனிப்பட்ட நிலை, குடும்பம், சமுதாய வளர்ச்சி ஆகிய அனைத்திற்கும் நேரத்தை ஒரு வெற்றியாளரால் மட்டுமே தர முடியும். வெற்றியாளர்களைக் கூர்ந்து கவனித்தால் நேரத்தை எவ்வளவு கவனமாக பயன்படுத்தி தம் கொள்கையைக் கடைப்பிடித்து குறிக்கோளை நிறைவேற்றுகின்றனர் என்பது புரியும்.

நேர நிர்வாகம் என்பது உண்மையில் சொல்லப் போனால் தன்னைத் தானே நிர்வகிப்பது ஆகும். அது ஒரு சிந்தனை முறை. முக்கியத்திற்கு முதலிடம் கொடுத்து (First Things First) தன்னை ஒழுங்குபடுத்திக் கொள்ளும் வாழ்க்கை முறை!

இன்றே இப்பொழுதே

எல்லையற்ற கால வெள்ளத்தில் "இன்று" என்பது எவ்வளவு முக்கியமானது! நேற்றைய நாள் சென்றது தான்; திரும்பி வராது. நாளைய நாளைப் பற்றி நமக்குத் தெரியாது. ஆனால் இன்றோ கையில் கிடைத்த பொன்; அதை செவ்வனே பயன்படுத்தும் பழக்கத்தினாலேயே வெற்றிப்படிகளில் ஏறி விடலாம்.

9/25/2010

வெற்றிக்கு வேண்டிய தலைமைப் பண்புகள்

ஒரு தலைவர் தொலைநோக்குப்
பார்வையில், திட்டமிடவும்,
தொண்டர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டி
தரமாகச் செயல்படவும், பல்வேறு
குணநலன் கொண்டவர்களை
ஒருங்கிணைத்து, ஆக்கபூர்வமாக
இயங்கிடச் செய்யவும், அவ்வப் போது
ஆய்வு செய்து, அறிக்கைகள் மூலம்
நிவர்த்தி செய்து, வரவு செலவு திட்டத்தில்
தேர்வு பெற்றவராக இருத்தல் வேண்டும்.
நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை
தலைமக்கள் இல்வழி இல்”.
நிலைபெற்ற படைவீரர் பலர் இருந்தும், தகுந்த படைத்தலைவர் இல்லாத தானை, இருந்தும் இல்லாதது போல்தான் என படைமாட்சி அதிகாரத்திலே, நம்முடைய தெய்வப்புலவர் மிகத்தெளிவாக, தலைமை குறித்து குறிப்பிடுகிறார்.
ஒரு நிறுவனத்தின் தலைவர், ஒரு பள்ளி யின் தலைமையாசிரியர், ஒரு அரசாங்கத்தின் அமைச்சர், மற்றும் பல்வேறு வகைப்பட்ட மக்களை ஒன்று திரட்டி ஒரு பணியில் ஈடுபடுத்தி வேலை வாங்கும் தலைவர். “இப்படி நடத்து கொண்டால் நல்லது” என்று உடன் வேலைபார்ப்பவர்கள் விரும்புவதை நான் இங்கே சொல்ல வரவில்லை. மாறாக, நீதிநூல்கள், நிர்வாகத்துறை நூல்களை உலக அறிஞர்கள் ஆராய்ந்து அறிந்து, நல்ல முறையில் எப்படி நிர்வாகம் செய்வது என்பதற்குக் கண்ட பல வழிமுறைகளில், ஒரு சிலவற்றை இதன் மூலம் உங்கள் கவனத்திற்கு கொண்டுவருவதே என் நோக்கமாகும்.
“தலைவர்” நடுநிலைக் கொள்கை உடையவராக இருக்க வேண்டும். அப்படி உடன் இருப்பவர்கள் எல்லாரும் உணரும்படி நடந்து கொள்ள வேண்டும். “நியாயமானதைச் செய்வார்” என்ற பெயர் நிலைத்து விட்டால் பின்னர் ஒரு செயலைத் தனக்காக முயன்றும் முடியாமற் போனாலும் கூட அவர் செய்திருப்பார் முறையாக இருந்திருந்தால்” என்று உடன் வேலை செய்வோர் தம்மைத்தாமே சமாதானம் செய்து கொள்வார் களே அன்றிக் குறைகூற மாட்டார்கள்.
ஒரு தலைசிறந்த தலைமைக்கு
தேவையான திறமைகள்
1. திட்டமிடுதல் – Planning
2. வடிவமைத்தல் – Organising
3. நியமித்தல் – Staffing
4. இயக்குதல் – Directing
5. ஒருங்கிணைத்தல் – Co-ordinating
6. அறிக்கை அளித்தல் – Reporting
7. வரவு செலவு திட்டமிடல் – Budgeting
ஒரு தலைமை, வெற்றிகரமான, தீர்க்கதரிசனமான, முடிவை எடுக்க வேண்டிய முக்கியமான குறிப்புகள்:
1. எடுக்கப்போகும் முடிவை குறித்த நோக்கங்கள் தெள்ளத் தெளிவாக இருத்தல் வேண்டும்.
2. முடிவு எடுத்தலுக்கு தேவையான தகவல்கள் மிகச் சரியாகவும், போதுமானவையாகவும் இருக்க வேண்டும்.
3. புதுப்புது மாற்றுத் தீர்வுகளை உருவாக்கத் தயங்கக்கூடாது.
4. எடுக்கப்படும் முடிவு மாற்றம் செய்யக் கூடிய வகையில் அமைதல் வேண்டும்.
5. எந்த பிரச்சனைக்கும் முடிவு காணும் போது அதை செயல்படுத்தும் போது, அதற்கு சம்பந்தப்பட்டவைகளுடன் கலந்தலோசிக்க வேண்டும்.
6. முடிவுகள் முறையாக அறிவிப்பூர்வமாக, தெளிவானதாக, சம்பந்தப்பட்டோர் அனைவருக்கும் புரியுமாறு அறிவிக்க வேண்டும்.
7. தீர்வுகளுக்கு போதிய நேரம் கொடுத்து, காலக்கெடுக்குள் நிறைவேற்றவேண்டும்.
8. முடிவுகள் சரிவர நிறைவேற்றப் படுகின்றதா என்பதைப் பின் தொடர்ந்து பார்க்க வேண்டும்.
தலைமை : வெற்றிகரமான, கமிட்டி அமைப்புக்கான வழிவகைகள்
1. ஒவ்வொரு கமிட்டியின் நோக்கமும் தெளிவாக வரையறுக்கப்படுதல் வேண்டும். இது எழுத்துவடிவில் இருக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் விவாதம் அர்த்தமுள்ளதாக இருக்கும். காலவிரயம் இருக்காது.
2. கமிட்டியின் அதிகாரவரம்பு நிர்ணயிக்கப் படுதல் இன்றியமையாதது, அதன் அதிகாரம், ஆய்வு செய்வதற்கா, ஆலோசனை வழங்குவதற்கா, பரிந்துரை செய்வதற்கா, அல்லது முடிவு எடுத்து செயல்படுவதற்கா என்பதை முன்னமே தீர்மானிக்க வேண்டும்.
3. கமிட்டி மூன்றுபேர் கொண்டிருந்தால் அதிலே இருவர் சேர்ந்து கொண்டு ஆதிக்கம் செலுத்துவர், மாறாக 10, 15 பேர் கொண்டு அமைத்தால் அது சந்தைக்கடையாகி விடும். வெற்றிகரமான கமிட்டி என்பது ஐந்து நபர்கள் கொண்ட அமைப்பானதாகும்.
4. கமிட்டியின் தலைவர் மிகவும் கவன மாகத் தேர்ந்தெடுக்கப்படுதல் வேண்டும். அவர் தீர்க்கமாகத் திட்டமிட்டு, நிகழ்ச்சிநிரல் தயாரித்து, உரிய காலத்தே, உறுப்பினர்களுக்குப் போதிய தகவல்கள் தந்து, கூட்டத்தை செவ்வனே நடத்தினால், குறைகள் பல களையப் படும். தலைவர்தான் கூட்டத்தின் சுருதியை, சரியாக சேர்க்கவும், விவாதம் தடம்புறளாமல் இருக்கவும், கருத்துக்களை ஒருங்கிணைத்து கொண்டு செல்லவும் முடியும்.
5. தலைவர் போன்றே கமிட்டி உறுப்பினரும் சரியாகத் தேர்வு செய்ய வேண்டும். ஏன் என்றால், வெற்றி அவர்களின் தகுதி, திறமை, நேர்மையை பொறுத்தே அமைகிறது. அவர்களுக்கு, கருத்து சமரசம் செய்து கொள்ளாமல், தீர்மானிக்க உதவும். விவேகம் இருத்தல் வேண்டும். பிறர் புரிந்து கொள்ளும்படி பேசும் ஆற்றல் பெற்றிருக்க வேண்டும்.
6. கமிட்டி அமைப்பின், செலவுக்கு ஏற்ற, பயன் இருத்தல் மிக, மிக முக்கியம்.
7. கூட்டம் குறித்த நேரத்தில் தொடங்கி, குறித்த நேரத்தில் முடிதல் வேண்டும். உறுப்பினர்கள் அனைவரும், விவாதத்தில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும். மாற்றுக்கருத்துக்கு இடமளித்தல் மிக முக்கியம்.
8. கமிட்டி அமைப்பின் செயல்பாட்டை அவ்வப்பொழுது, மதிப்பீடு செய்தல் வேண்டும். பயனற்ற கமிட்டியை கலைத்து விட தயங்கக்கூடாது. கமிட்டி யின் பரிந்துரைகளும், தீர்மானங்களும் நடை முறைப்படுத்தப்படுகிறதா என கண் காணிக்க வேண்டும்.
9. கமிட்டியின் செயலர், பல்திறன் கொண்டவ ராகவும், நிலையாகப் பணி செய்யக்கூடிய வராகவும், நேர்மையுடையவராகவும், இருப்பது அவசியம். அவரால்தான் கமிட்டி யின் செயல் பாட்டை செவ்வனே கவனிக்க இயலும். கமிட்டிக்கு ஸ்திரத்தன்மையை கொடுப் பதும் அவர்தான்.
ஒரு திறமையான அமைப்புக்கான அடையாளங்கள்
1. சரியான வேலையை, சரியான நபர் கொண்டு, சரியான இடத்திலிருந்து, சரியாகச் செய்வதற்கான, தளத்தையும் களத்தையும், அமைத்துக்கொடுத்தல்.
2. அதிகாரம் பரவலாக்கப் படுவதற்கு சாதகமாக இருத்தல், அதாவது அமைப்பு இயந்திரமாக இயங்காமல், உயிர் துடிப்புள்ள உடல்போல் செயல்படல் வேண்டும்.
3. வள ஆதாரங்களான, மனிதவளம், நிதிவளம், பொருள்வளம், மூலதனவளம், போன்றவை முழுமையாகப் பயன்படுத்து வதற்கு, ஏற்றதாக இருத்தல். நவீன தகவல் தொழில்நுட்பம் பயன்பாடும், மாற்றங் களுக்கு ஏற்ப நெகிழ்ந்து கொடுக்கும்படியும் அமைதல் வேண்டும்.
4. அமைப்பின், அதிகாரமும், கடமையும், பொறுப்பும், சுதந்திரமாகப் பிரயோகிக் கப்படும்போது பணியாளர்களின் படைப்பாற்றல் பன்மடங்கு பெருகும்.
சுருக்கமாகச் சொல்வதென்றால், ஒரு தலைவர் தொலைநோக்குப் பார்வையில், திட்டமிடவும், தொண்டர்களுக்குத் தன்னம் பிக்கை ஊட்டி தரமாகச் செயல்படவும், பல்வேறு குணநலன் கொண்டவர்களை ஒருங்கிணைத்து, ஆக்கபூர்வமாக இயங்கிடச் செய்யவும், அவ்வப் போது ஆய்வு செய்து, அறிக்கைகள் மூலம் நிவர்த்தி செய்து, வரவு செலவு திட்டத்தில் தேர்வு பெற்றவராக இருத்தல் வேண்டும். எல்லாவற்றிக்கும் மேலாக,
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று!
என்ற வள்ளுவப் பெருந்தகையின், நெறி தவறாதவராக இருப்பவரே மிகச் சிறந்த தலைவராவர்.

நன்றி:-  ஏ.ஜி. மாரிமுத்துராஜ், தன்னம்பிக்கை.

9/23/2010

பிரபஞ்ச விதி - ஓஷோ

கவலைப்படாமல் விளையாடிக்கொண்டிருப்பதுதான்
பிரபஞ்சம்
ஆனால் மனிதன் ,தன் வாழ்வில்
வேலை செய்வதைத்தவிர எதையும் செய்வதில்லை
இதனால் அவனுக்கு எல்லாமே தலைகீழாகிவிடுகின்றது

அதனால்தான், அவனுக்கு வேதனைகள்.

பிரபஞ்சத்தின் தாவோ, பிரபஞ்ச விதி
ஒரு லீலை-ஒரு விளையாட்டு.

மனிதப் பகுத்தறிவிற்கு எட்டியது,வேலைதான்.
ஏனென்றால், பயன் கருதாமல்,அதற்கப்பால்
சிந்திக்க பகுத்தறிவால் முடியாது.

ஆனால்,இருத்தல்,இருப்பது,பயன்பாட்டுக்கு அப்பால்

இந்த இடைவெளி பற்றி ஆழமாக் யோசி.
உனக்கு பாலம் கிடைக்கும்-
பாலம் அவசியம்.
ஏனென்றால் வேலையின்றி வாழ்வும் முடியாது.
வேலைக்காக மட்டும் வாழ்வது சகிக்க முடியாதது;
அது வாழ்வே அல்ல.

தியானிப்பவன் வேலையும் செய்வான்
ஆடிப்பாடியும் மகிழ்வான் –
வேலை செய்வதே அவனுக்கு விளையாட்டு-
அதனால்தான அப்படி.
தியானமற்றவன் விளையாடலாம்,வேலை செய்யலாம்.
அவன் விளையாடுவதே
வேலை செய்யத்தான்.
--ஓஷோ (இரண்டாவது கோப்பைத் தேநீர்)
இன்டர்நெட்

யசோதை குழந்தை கண்ணன் வாயை திறந்தபோது உலகமே தெரிந்தது
இது புராணம்

நான் எனது லேப்-டாப் யை  திறந்தேன்
உலகமே தெரிந்தது.
இது நவீனம்.

-Parthasarathi, Saudi Arabia

பயணம்
செல்வம் சேர்க்க மாத்திரம் அல்ல 
 தன்னை அறிய
உலகம் புரிய
உள் அமைதி சேர்க்க
ஆத்ம ஞானம் பெற
மேற்கொண்டேன் பயணம்.       

-sarathi, Saudi Arabia