9/23/2010

பிரபஞ்ச விதி - ஓஷோ

கவலைப்படாமல் விளையாடிக்கொண்டிருப்பதுதான்
பிரபஞ்சம்
ஆனால் மனிதன் ,தன் வாழ்வில்
வேலை செய்வதைத்தவிர எதையும் செய்வதில்லை
இதனால் அவனுக்கு எல்லாமே தலைகீழாகிவிடுகின்றது

அதனால்தான், அவனுக்கு வேதனைகள்.

பிரபஞ்சத்தின் தாவோ, பிரபஞ்ச விதி
ஒரு லீலை-ஒரு விளையாட்டு.

மனிதப் பகுத்தறிவிற்கு எட்டியது,வேலைதான்.
ஏனென்றால், பயன் கருதாமல்,அதற்கப்பால்
சிந்திக்க பகுத்தறிவால் முடியாது.

ஆனால்,இருத்தல்,இருப்பது,பயன்பாட்டுக்கு அப்பால்

இந்த இடைவெளி பற்றி ஆழமாக் யோசி.
உனக்கு பாலம் கிடைக்கும்-
பாலம் அவசியம்.
ஏனென்றால் வேலையின்றி வாழ்வும் முடியாது.
வேலைக்காக மட்டும் வாழ்வது சகிக்க முடியாதது;
அது வாழ்வே அல்ல.

தியானிப்பவன் வேலையும் செய்வான்
ஆடிப்பாடியும் மகிழ்வான் –
வேலை செய்வதே அவனுக்கு விளையாட்டு-
அதனால்தான அப்படி.
தியானமற்றவன் விளையாடலாம்,வேலை செய்யலாம்.
அவன் விளையாடுவதே
வேலை செய்யத்தான்.
--ஓஷோ (இரண்டாவது கோப்பைத் தேநீர்)
இன்டர்நெட்

யசோதை குழந்தை கண்ணன் வாயை திறந்தபோது உலகமே தெரிந்தது
இது புராணம்

நான் எனது லேப்-டாப் யை  திறந்தேன்
உலகமே தெரிந்தது.
இது நவீனம்.

-Parthasarathi, Saudi Arabia

பயணம்
செல்வம் சேர்க்க மாத்திரம் அல்ல 
 தன்னை அறிய
உலகம் புரிய
உள் அமைதி சேர்க்க
ஆத்ம ஞானம் பெற
மேற்கொண்டேன் பயணம்.       

-sarathi, Saudi Arabia

9/21/2010

ஆழ்வார்கள்

முதலில் ஆழ்வார் என்கிற சொல்லுக்கு என்ன பொருள் என்று பார்ப்போம்.
பகவானின் குணங்களில் ஆழ்ந்து ஈடுபடுபவர்களை ஆழ்வார்கள் என்று சொல்வார்கள். பகவான் விஷ்ணுவாகத்தான் இருக்க வேண்டும் என்று இல்லை. எதிலும் தீவிரமாக ஆழ்பவர்களை ஆழ்வார் என்று அழைக்கலாம். துக்கத்தில், துயரத்தில், சந்தோஷத்தில் ஆழ்வாரும் உண்டு. ஏ.கே. ராமானுஜன் ஆழ்வார் பாடல்கள் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த புத்தகத்துக்கு Hymns for the Drowning என்று பெயர் வைத்தார். வெள்ளத்தில் மூழ்குபவர்களுக்கான பாடல்கள் என்று. பக்தி வெள்ளம்.
'ஆசைப்பட்டு ஆழ்வார் பலர்' என்று திருமழிசையாழ்வாரே நான்முகன் திருவந்தாதியில் சொல்லியிருக்கிறார். நான் சொல்லப் போகும் ஆழ்வார்கள் தனிச் சிறப்புள்ளவர்கள்.
நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என்னும் அருமையான வைணவ நூலின் பாடல்களை இயற்றியவர்கள். ஒரே ஒரு பாடலை முதலில் மாதிரி பார்ப்போம்.

நீயே உலகெலாம் நின் அருளே நிற்பனவும்
நீயே தவத் தேவ தேவனும் - நீயே
எரிசுடரும் மால்வரையும் எண் திசையும் அண்டத்து
இரு சுடரும் ஆய இவை

ஏழாம் நூற்றாண்டில் - எழுதப்பட்ட இந்த வெண்பாவின் அற்புதம் ஏறக்குறைய உங்களுக்குப் புரியும் என்று எண்ணுகிறேன். கடவுளைப் பார்த்து,

நீதான் எல்லா உலகமும்.
பூமியில் நிலைத்திருப்பவை யெல்லாம் உன்அருள்.
நீதான் தேவர்களுக்கெல்லாம் தேவன்.
நீதான் நெருப்பு, நீதான் மலை, நீதான்
எட்டுத் திசைகளும்
நீதான் சூரியன் சந்திரன்.

இவ்வகையிலான அபாரமான நாலாயிரம் பாடல்களைக் கொண்டது திவ்வியப் பிரபந்தம் - அவைகளைப் பாடிய ஆழ்வார்கள் பற்றியது இந்தக் கட்டுரைத் தொடர்.
ஆழ்வார்கள் பத்துப் பேர். அவர்கள் பெயர்கள் இவை : பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார், திருமங்கையாழ்வார், தொண்டரடிப் பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், குலசேகர ஆழ்வார், பெரியாழ்வார், நம்மாழ்வார், இவர்களுடன் விஷ்ணுவை நேரடியாகப் பாடாமல் நம்மாழ்வாரைப் பற்றிப் பதினோரு பாடல்கள் பாடிய மதுரகவியாழ்வாரையும் திருப்பாவையும் நாச்சியார் திருமொழியும் பாடிய பெண்பாற் புலவரான ஆண்டாளையும் சேர்த்துக் கொண்டு ஆழ்வார்கள் பன்னிரெண்டு பேர் என்று சொல்வதும் உண்டு. பெண்களையும் ஆழ்வார் என்று குறிப்பிடும் பழக்கம் - பழந்தமிழ்நாட்டில் இருந்திருக்கிறது. ஆழ்வார் பராந்தகன், குந்தவைப் பிராட்டியார், மதுரகவியாழ்வார்.
குலோத்துங்க சோழன் மகளார் அம்மங்கையாழ்வார் போன்ற சோழ சாசனங்களிலிருந்து, இந்தச் சொல் இருபாலார்க்கும் பயன்பட்டது என்பது தெரிகிறது. ஆண்டாள் என்னும் பெயரில் - ஆள் என்பதே ஆழ்வாரின் - பகுதி என்று எண்ண வைக்கிறது.
ஆழ்வார் என்கிற சொல்லை ஜைன, பௌத்த ஞானிகளுக்கும் பயன்படுத்தியுள்ளார்கள். உதாரணமாக மயித்திரியாழ்வார் என்று புத்ததேவர்க்குப் பெயருள்ளதைத் தக்கயாகப் பரணி என்னும் நூல் சொல்கிறது. அவிரோதியாழ்வார் என்று ஒரு ஜைன முனிவருக்குப் பெயர் இருந்திருக்கிறது.
ஆழ்வார் என்ற பட்டம், நேரடியாகக் கடவுள் என்கிற பொருளிலும் - ஆழ்வார் திருவரங்கத் தேவர்- என்று சோழ சாஸனங்களில் வருகிறது. நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தை இயற்றிய ஆழ்வார்கள் ஒரே காலத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. சங்க காலத்துக்குப் பிற்பட்டும் பிரபந்தத்தைத் தொகுத்த நாதமுனிகள் காலத்துக்கு முற்பட்டும் ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர்கள். இவர்கள் காலத்தைப் பற்றிப் பின்னால் விவரமாகச் சொல்லப் போகிறோம்.
இவர்கள் ஒரே குலத்தை சேர்ந்தவர்களும் இல்லை. முதலாழ்வார்களான பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் மூவரும் 'அயோநிஜர்கள்' என்று விவரிக்கப்படுகிறார்கள். இவர்கள் கண்டெடுக்கப்பட்டவர்கள் என்பதும் பிற்பாடு ரிஷிகளாக இருந்தவர்கள் என்பதும் தெரிகிறது. திருமழிசையாழ்வார் தாழ்ந்த குலத்தில் பிறந்தவர் என்பது அவர் பாட்டிலிருந்தே தெரிகிறது.
குலங்களாய ஈரிரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன்
என்று அவரே சொல்லிக் கொள்கிறார். பெரியாழ்வார் வேயர் குல அந்தணர் (மூங்கிலைச் சார்ந்த பார்ப்பனக் குடியினரை வேயர் என்று சொன்னார்கள்). பெரியாழ்வாரால் ஒரு துளசித் தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட பெண் குழந்தை, ஆண்டாள். திருமங்கையாழ்வார் கள்வர் குலத்தைச் சார்ந்தவர். குலசேகர ஆழ்வார் சேரநாட்டு அரச குலத்தைச் சார்ந்தவர். திருப்பாணாழ்வார் அந்திம வம்சம் பஞ்சம குலம் என்று அப்போது அழைக்கப்பட்ட பாண வம்சத்தில் பிறந்தவர். தொண்டரடிப் பொடியாழ்வார் பிராமணர். நம்மாழ்வார் வெள்ளாள சிற்றரசர் வம்சத்தைச் சேர்ந்தவர். அவர் மாணாக்கரான மதுரகவி, பிராமணர். இவ்வாறு எல்லாக் குலங்களிலும் ஆழ்வார்கள் இருந்திருக்கிறார்கள்.
சாதி வித்தியாசம் பார்க்காமலிருப்பது வைணவக் கருத்துக்களில் தலையாயது. அந்தணருக்கான கிரியைகள் அவர்களுக்கு முக்கியமில்லை. அவைகளைப் புறக்கணித்தார்கள் என்பதற்குக்கூட ஆதாரம் இருக்கிறது. அந்தணரான தொண்டரடிப் பொடியாழ்வார்,

குளித்து மூன்று அனலை ஓம்பும் குறிகொள்
அந்தண்மை தன்னை ஒளித்திட்டேன்

- என்று சொல்லும்போது தினம் குளிப்பதும் மூன்று முறை அக்கினி ஹோத்திரம் செய்வதும் போன்ற rituals முக்கியமில்லை என்பதை வலியுறுத்துகிறார்.
முதலாழ்வாரான பொய்கையாழ்வார்,

புத்தியால் சிந்தியாது ஓதி உருவெண்ணும்
அந்தியால் - ஆம்பயன் அங்கென்?

- என்று பாடும்போது பகவானை மனத்தால் நினைக்காமல் வேறு மந்திரங்களை உருப்போட்டுச் செய்யும் சந்தியாவந்தனத்தால் பயனே இல்லை என்று கூறுகிறார். ஆரம்பத்திலிருந்தே சடங்குகள் முக்கியமில்லை என்கிறது வைணவம்.
தொண்டரடிப் பொடியாழ்வார்,

இழிகுலத்தவர்களேனும் எம் அடியார்கள் ஆகில்
தொழுமினீர் கொடுமின் கொண்மின்

- என்று வைணவராக இருந்தால் போதும்; குலம் முக்கியமில்லை; அவர்களைத் தொழுது அவர்களுக்குக் கொடுக்கலாம், கொள்ளலாம் என்கிற சாதியற்ற வைணவத்தின் ஆணிவேர் ராமானுஜர் காலத்துக்கு முன்பே இருந்திருக்கிறது.
எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற் போல் நம்மாழ்வார்,

''குலத்தாங்கு சாதிகள் நாலிலும் கீழிழிந்து
நலந்தானிலாத சண்டாள சண்டாளர்களாகிலும்
வலந்தாங்கு சக்கரத்து அண்ணல் மணிவண்ணற்கு
ஆள் என்று உள்
கலந்தார் அடியார்தம் அடியார் எம் அடிகளே''

எத்தனைதான் கீழான சாதியராக இருந்தாலும் சக்கரத்தை வலது கையில் வைத்திருக்கும் விஷ்ணுவின் ஆள் நான் என்று உள் கலந்துவிட்டால், அவர்களின் அடியவர்களுக்கு அடியவர் நாங்கள் என்று கூறும் இந்தக் குரல் எட்டாம் நூற்றாண்டிலேயே சாதி பாராட்டாத பக்திக் குரல்.
பிரபந்தத்தில் உள்ள நாலாயிரம் பாடல்களின் வரிசைக் கிரமம் அவைகளைத் தொகுத்த நாதமுனிகள் அமைத்தது. இக்கட்டுரைத் தொடரில் அந்த வரிசையைப் பயன்படுத்தினால் - ஒரே ஆழ்வாருக்குப் பலமுறை திரும்ப வரவேண்டியிருக்கும். அதனால் ஆழ்வார்கள் வாழ்ந்த கால வரிசைப்படி அவர்கள் பாடல்களையும் தத்துவங்களையும் விளக்க முற்படுகிறேன். இக்கட்டுரையில் உள்ள வைணவக் கருத்துக்கள் யாவும் பெரிய மகான்களும் உரையெழுதியவர்களும் வியாக்யானக்காரர்களும் கொடுத்த கருத்துக்கள். என் சொந்தக் கருத்துக்கள் அங்கங்கே இருப்பின் அதை நான் தனியாகக் குறிப்பிடுகிறேன். பிரபந்தத்தில் என் ஈடுபாடு நான் ஒரு வைணவன் என்கிற கோணத்தில் மட்டும் இல்லை. அதன் தமிழ் நடையும் சொற் பிரயோகங்களும் என் எழுத்துத் திறமைக்கு வலுவான பின்னணியாக இருந்திருக்கின்றன. பிரபந்தத்தில் குறிப்பாக நம்மாழ்வார் திருவாய் மொழியில் உள்ள பிரபஞ்சக் கருத்துக்கள் இயற்பியல் காஸ்மாலஜி கருத்துக்களுடன் ஒத்துப் போவதை ஓர் அறிவியல் உபாசகன் என்ற முறையில் வியந்திருக்கிறேன். அந்த வியப்புக்களையும் உங்களுக்குக் கொடுக்க முயல்கிறேன். உதாரணமாக -
நம்மாழ்வாரின் பாசுரம் ஒன்று இவ்வாறு துவங்குகிறது.

ஒன்றும்தேவும் உலகும் உயிரும் யாதுமில்லா
அன்று நான்முகன் தன்னோடு தேவர்
உலகோடு உயிர் படைத்தான்

ஸ்டீபன் ஹாக்கிங்கின் ஒரு கட்டுரையில் (The Origin of the universe),
Although Science may solve the problem of how the universe began, it cannot answer the question why does the universe bother to exist என்கிறார். அதற்கு ஆதிகாரணமாக ஒரு கடவுள் தேவைப்படுகிறார் என்பதை அறிவியலாளர்கள் தயக்கத்துடன் ஒப்புக் கொள்கிறார்கள். எதுவுமே இல்லாத, காலம் கூடத் துவங்காத அந்த முதற் கணத்திற்கு முற்பட்ட நிலையைப் பற்றி இயற்பியல் Singularity என்கிறது. நம்மாழ்வாரும் அதைத்தான் சொல்கிறார்.
இந்த முன்னுரையுடன் முதல் ஆழ்வாரான பொய்கையாழ்வாரின் முதல் பாடலைப் பார்ப்போம்.

வையம் தகளியா(ய்) வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொன்மாலை
இடராழி நீங்குகவே

என்று கம்பீரமான மிகப் பெரிய விளக்கு ஒன்றை ஏற்றுகிறார் பொய்கையாழ்வார்.
உலகம்தான் அகல், கடல்தான் நெய், சூரியன்தான் ஒளிப்பிழம்பு, இம்மாதிரியான பிரம்மாண்டமான விளக்கை சக்கரம் ஏந்திய விஷ்ணுவின் பாதத்தில் ஏற்றி, சொற்களால் ஒரு மாலை அணிவித்தேன், என் துன்பக்கடல் எல்லாம் நீங்குக என்று.
இதைச் சொல் மாலை என்பது எத்தனை பொருத்தமானது!
பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் மூவரும் ஆளுக்கு நூறு பாடல்கள் பாடியிருக்கிறார்கள். அவை அந்தாதி என்னும் வடிவில் உள்ளன. அதாவது, முதல் பாடலின் கடைசி வரியில் அடுத்த பாடலின் ஆரம்ப வார்த்தை இருக்கும். இப்படிச் சொற்களை மாலை போன்று தொடுக்கிறார்கள் மூவரும். அதில் விசேஷம் நூறாவது பாட்டின் கடைசி வார்த்தை முதல் பாட்டின் முதல் வார்த்தை. உதாரணமாக முதல் பாடல் 'வையம்' என்று ஆரம்பிக்கிறது. 'என்று' என்பதில் முடிகிறது. அடுத்த பாட்டு - 'என்று கடல் கடைந்தது எவ்வுலகம் நீரேற்றது' என்று துவங்குகிறது. பொய்கையாழ்வாரின் முதல் திருவந்தாதியின் நூறாவது பாடல் மாயவனை மனத்து வை என முடிகிறது! மாலை ஒரு சுற்று முற்றுப் பெற்று விட்டதல்லவா?
வைணவ சம்பிரதாயத்தின் கருத்துக்களைப் பரப்பும் பெரியோர்களை ஆழ்வார்கள், ஆசாரியர்கள் என்று இரு வகைப்படுத்துவார்கள். இவர்களில் ஆழ்வார்கள் பன்னிரண்டு பேர். ஆசாரியார் என்போர் ஆழ்வார்களுக்குப் பிற்பட்டவர்கள். பிரபந்தத்தைத் தொகுத்த நாதமுனிகள் இவர்களில் முதலானவர். ஆழ்வார்கள் சொன்ன வழியைப் பின்பற்றி வைணவக் கருத்துக்களை நாட்டில் பரப்பி நல்வாழ்வுக்கு வழிகாட்டுபவர்கள் ஆசாரியார்கள். இன்றைய நாட்களில் கூட ஒவ்வொரு வைணவனுக்கும் ஒரு ஆசாரியர் இருப்பார். அவரிடம் தத்துவ விளக்கங்கள் கேட்டறியலாம். இந்த மரபு தொடர்கிறது.
ஆழ்வார்கள் வாழ்ந்த காலத்தைப் பற்றிய பல ஆராய்ச்சிகள் உள்ளன.
டாக்டர் மு.இராகவையங்கார் அவர்கள் எழுதிய ''ஆழ்வார்கள் கால நிலை'' என்கிற புத்தகம் முதன்மையானது. அதில் வரும் கருத்துக்கள் அத்தனையுடனும் ஒத்துப் போக முடியாவிட்டாலும் ஐயங்காரின் ஆராய்ச்சி முறை விஞ்ஞானபூர்வமானது.
வைணவ வரலாறுகள் அவ்வளவாகச் சரித்திர உண்மையைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. கருடவாகன பண்டிதர் என்பவர் ராமானுஜரின் காலத்தவர். அவர் சமஸ்க்ருதத்தில் 'திவ்ய சூரிசரித்திரம்' என்று ஒரு நூல் எழுதியுள்ளார். அதிலும் பின்பழகிய பெருமாள் சீயர் என்பவரால் ஆக்கப்பட்ட ஆறாயிரப்படி குருபரம்பரை என்கிற, சமஸ்க்ருதமும் தமிழும் கலந்த மணிப்ரவாள நடையில் எழுதப்பட்ட, நூலும் ஆழ்வார்களின் பிறந்த தினங்கள், அவர்கள் வாழ்வின் சம்பவங்களை விவரிக்கின்றன.
ஆனால், நவீன ஆராய்ச்சி முறைப்படி உணர்ச்சியும் பக்தியும் கலந்த இந்தக் கதைகளை சரித்திரச் சான்றுகளாக ஏற்றுக் கொள்வதில் தயக்கம் உள்ளது. எனவே, ஆழ்வார் பாடல்களிலேயே கிடைக்கும் அகச்சான்றுகளிலிருந்தும் மற்ற, பக்தி சாராத இலக்கண இலக்கிய நூல்களின் மேற்கோள்களிலிருந்தும் தற்செயலான வரலாற்றுக் குறிப்புகளிலிருந்தும் ஆழ்வார்கள் காலத்தை ஓரளவுக்கு யூகிக்க முடிகிறது.

தியானம்

தியானம்
தூக்கத்தின் போழுது நம்மை அறியாமல நாம்தியானத்தில் ஈடுபடுகிறொம்.
தியானம் என்பது நல்ல விழிப்புணர்வுடன உறநுகுவது.
உறக்கத்தின் போழுது குறைந்தளவு தான் பிரபஞ்ச சக்தியை பெறமுடிகிறது.
தியானத்தில் ஈடுபடும்போழுது அபரிதமான சக்தியை பெறமுடியும்.
இந்த சக்தி நம்முடைய உடல், மனம் மற்றும் அறிவுத்திறனை பலமடநுகு விரிவடைய செய்கிறது.
நம்முடைய "ஆறாவது அறிவின்" கதவை திறக்கவும் விரிவடையவும்க் இது உதவுகிறது.
தியானத்தின் மூலம் கிடைக்கபெறும் அதீதமான சக்த நம்மை சந்தொஷப்ப்டுத்தும்க். நம் ஆரொக்கியத்தை அதிகரிக்கும். முழு மனநிறைவுடன் காணப்படுவொம். மேலும் பல சிகரங்களை தோடசேய்யும்.
தியானம் என்பது ஒரு பயணம்.
Spiritual Reality video is now available in Tamil version as 'AANMIKA YATARTAM'
தியானத்தின்போழுது, நாம் உணரும் வகையில் நம் உடலிலிருந்து மனதிற்கு பயணிப்போம்.
மனதிலிருந்து, அறிவாற்றலுக்கு
அறிவாற்றலிலிருந்து நமக்குள்
பின்பு அதையும்க தாண்டி
"தியானம்" பெற்கொள்ள முதலில் நம் உடல் மறுற்ம் மனம் சம்மந்தப்பட்ட சேயல்களை நிறுத்தவேண்டும் அதாவது உடல்க அசைவுகளையும் பார்ப்பது, பேசுவது, யொசிப்ப்து பொன்ற சேயல்களையும்.
"தியானம்" சேய்யும் முறை நாம் தேரிந்து கோள்ளலாம்.
தியானத்தின் போழுது நாம் முதலில் பார்க்க வேண்டியது கட்டுப்படுத்தி நம் உடலை கட்டூப்படுத்தி ஒரே இடத்தில்க அமர சேய்வது.
எந்த முறையிலும்க அமர்ந்து கோள்ளலாம்.
நமக்கு சௌகரியமான முறையில்.
அதே சமயத்தில் அசைவின்றி, ஒரே இடத்தில் அமர்ண்து கோள்வது முக்கியம்.
தரையில் அமர்ந்துகோண்டோ அல்லது நாற்காலியில் அமர்ந்துகோண்டோ தியானம் மேற்கோளள்லாம்க் நமக்கு எந்த இடத்தில் அமர்ந்துகோண்டு தியானம் சேய்ய வசதியா உளள்தோ அந்த இடத்தில்க அமர்ந்துகோண்டு தியானம் சேய்யலாம்.
வசதியாக உட்கார்ந்து கோள்ளுங்கள்.
கால்களை சப்பண்மிட்டுக் கோள்ளுங்கள்.
இரண்டு கைகளின் விரல்களை சேர்த்துக்கோள்ளுங்கள்.
கண்களை மேதுவாக கோடுங்கள்.
அமைதியான நிலையில் சகஜ நில்லைக்கு வாருங்கள்.
உங்கள்க முழு உடலையும் இலக்காக்கி கோள்ளுங்கள்.
மனதையும் இலக்காக்கி கோள்ளுங்கள்.
கால்களை பின்னி, விரல்களை கோர்த்த நிலையில் நமக்கு ஒரு சக்தி வடிவம் உருவாக்கப்படுகிறது.
கண்கள்தான் நம் மனதின் கதவுகள். அதனால் கண்களை மூடிய நிலையில் இருத்தால் அவசியம்.
மந்திர்ங்களை ஒதும்போழுதோ அல்லது முணுமுணுக்கும் போழுதோ நம் மனம் ஒரு வேலையில் ஈடுபடுகிறது. ஆதலால், மந்திரங்கள் ஓதுவதை நிறுத்திக்கோள்ள வேண்டும்.
நம்முடைய உடல் மூள்றிலும் சகஜநிலையில் இருக்கும்போழுது நமது உள்ளுணர்வு அடுத்த நிலைக்கு பயணம் சேய்யும்.
மனம் மறுற்ம் அறிவு நிலைக்கு மனம் என்பது பல எண்ணங்களின் கலவை.
மன தளத்திற்குள், கணக்கற்ற எண்ணங்கள் வந்தவண்ணமே உள்ளது.
நமது எண்ண ஓட்டங்க்ளுக்கு ஏற்றவாறு, எண்ணற்ற கேள்விகள் தேரிந்தோ, தேரியாமலோ நமது மனதிற்குள் எழுந்தபடியே இருக்கும்.
மனதை அரிவாற்றலை கடந்த நிலைக்கு நாம் சேல்லவேண்டுமேன்றால் நாம் நமது மூச்சுகாற்றை கவனிக்க தூவங்கவேன்டும்.
கவனித்தால் என்பது நமக்கும் இருக்கும் இயற்கையான குணம்.
இதனால், நாம் நம் மூச்சுக்காற்றை கவனிக்க தூவங்கவேண்டிம்.
மூச்சு விடுவது ஒரு சேயலாக எண்ணி சேய்யக்கூடாது.
காற்றை உளேள் இமூப்பதும், வேளியே விடுவதும்க நமக்கு தேரிந்து நடந்திடக்கூடாது.
மூச்சுகாற்றை சுவாசிப்பதும்,வேளியனுப்புவதும் தண்னிச்சையாக நடைபேற வேண்டும்.
நம்முடைய இயற்கையான சுவாசத்தை கவனித்தல் மட்டுமே போதுமானது. இதுதான் முக்கியம்.
இதுதான நம் எண்ணங்கள் சிதறாமல் இருக்க சிறந்த வழி.
எண்ணங்களுக்கு பின் ஓடாதீர்கள்.
கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் எண்ண அலைகளுக்கும் இடம் கோடுக்காதீர்கள்.
எண்ணங்களை தவிர்த்துவிடுங்கள்.
இயற்கையான சுவாசத்தை மட்டும் கவனத்தில் கோள்ளுங்கள். சுவாசத்துடன் மட்டுமே இருங்கள்.
அப்போழுது, நமது எண்ண அலைகளின், அளவுகளின் குறையும். மேதுவாக நமது சுவாசத்தின் அளவு குறைந்து, சிறியதாகிவிடும்.
இறுதியில் சுவாசத்தின் அளவு மிகவும் குறைந்த நம் புருவங்களுக்கு இடையே ஒரு ஒளி கீற்றை போல் திடப்படுத்திக்கோளுள்ம்.
இந்நிலையில்
ஒருவருக்கு சுவாசமும் இருக்காது, எண்ணங்களும் இருக்காது.
எண்ணங்கள் அற்ற நிலையில் இருப்பார்க்.
இந்த நிலையை தான் முழுமையான முக்தி நிலை என்றோ அல்லது "எண்ணங்கள் அற்ற நிலை" என்றோ கூறுகிறோம்.
இதுதான் தியான நிலை.
இந்த நிலையில் தான்க பிரபஞ்ச சக்தி அருவிபோல் நம்முள் பாயும்.
தியானம் அதிகமாக சேய்வதன்மூலம் நமக்கு பிரபஞ்ச சக்தி அதீதமாக கிடைக்கப்பேறும்.
பிரபஞ்ச சக்தி உடல் முழவதும் சக்தி வடிவத்தின் மூலமாக பாய துவங்கும்க்.
இதை தேய்வீக வடிவம் என்றும் கூற்லாம்

9/14/2010

தபால்பெட்டி

தினசரி வழக்கமாகிவிட்டது
தபால்பெட்டியைத்
திறந்துபார்த்துவிட்டு
வீட்டுக்குள் நுழைவது.
இரண்டு நாட்களாகவே
எந்தக் கடிதமும் இல்லாத
ஏமாற்றம்.
இன்று எப்படியோ
என்று பார்க்கையில்
அசைவற்று இருந்தது
ஒரு சின்னஞ்சிறு
இறகு மட்டும்
எந்தப் பறவைஎழுதியிருக்கும்
இந்தக் கடிதத்தை.

-கல்யாண்ஜி கவிதைகள்

9/13/2010

குறையை நிறையாக்கலாம்

ஒரு கிறித்துவ தேவாலயத்தில் புதிதாக ஒரு மதகுரு பொறுப்பேற்றார். அவர் நிர்வாகத்தை முற்றிலும் மாற்றி அமைக்க முடிவு செய்தார் தேவாலயத்தில் பணிபரியும் எல்லோருக்கும் எழுதப்படிக்க தெரிய வேண்டும் என்று எதிர் பார்த்தார். கையெழுத்துக் கூட போடத் தெரியாதவர்களை வேளையைவிட்டு நீக்கிவிடுவேன் என்று எச்சரித்தார். கொஞ்ச அவகாசமும் கொடுத்தார்.
அங்கு கூட்டிப் பெருக்கும் ஏழைத் தொழிலாளிக்கோ என்ன முயன்றும் எழுதப்படிக்க வரவில்லை. கையெழுத்து கூட போட் முடியவில்லை. எவ்வளவு கெஞ்சியும் மதகுரு மசியவில்லை. வேலையை விட்டு நீக்கிவிட்டார். மிகுந்த வருத்ததுடன் சோர்வாகத் தேவாலயத்தைவிட்டு வெளிய வந்த ஏழைக்கு வேதனை. சொல்லமுடியாத வேதனை. பலவருட பந்தம் பறிபோய்விட்டது. அழுதபடி திரும்பி திரும்பி தேவாலையத்தை பார்த்தபடி நடந்து கொண்டிருந்தார். மனவேதனை மறைய ஒரு சிகரேட் பிடிக்கலாம் என்று நினைத்தால் பாக்கெட்டில் ஒரு சிகரெட் இல்லை. பக்கத்தில் பார்த்தால் சிகரெட் கடைகூட ஓன்றும் இல்லை. நெடுந்தூரம் நடந்துவிட்டார் ம்ஹ�ம்... சிகெரட் கடையே இல்லை.

பட்டென்று அவருக்கு பொறித் தட்டியது. " நாம் ஏன் இங்கு சிறிய பெட்டிக் கடை வைக்கக் கூடாது... இங்கே வருகிற பலபேருக்கு பயன்படுமே" என்று முடிவு செய்தார். வெளியே அனுப்பும் போது மதகுரு கொடுத்த சிறிய தொகையை முதலாக்கி சிகரெட்டுடன் மற்றும் பல பொருட்களுடன் கடை ஆரம்பித்தார். வியாபாரம் அமோகமாக நடந்தது... சிறிது காலத்தில் கடையை விரிவுபடுத்தி வியாபாரத்தை பெரியதாக்கினார். சில மாதங்களில் பெரிய பணக்கரார் ஆகிவிட்டார்.

இவரிடம் பணம் இருப்பது தெரிந்து ஒரு வங்கியின் மேலாளர் தங்கள் வங்கியில் சேமிக்கும்படியும் வட்டி கிடைக்கும் என்றும் சொல்லி சம்மதிக்க வைத்தார். முடிவில் சேமிக்க விண்ணப்பபடிவங்கள் நிறைவு செய்துவிட்டு பணக்காரரிடம், " கையொப்பம் போடுங்கள் " என்றார். பணக்காரருக்கு வந்ததே கோபம்... நிறைய சத்தம் போட்டுவிட்டு முடிவில், தனக்கு கையெழுத்து போடத் தெரியாது என்று முடித்தார்.

வங்கி மேலாளர் " அட... கையெழுத்து கூட போடத் தெரியாமலேயே இவ்வளவு பெரிய வியாபாரியாகி விட்டீர்கள்... உங்களுக்கு அதுவும் தெரிந்திருந்தால் அடடா நீங்கள் எங்கேயோ இருந்திருப்பீர்கள்? " என்று புகழ்ந்ததும் " வாயை மூடுங்கள்.. எனக்கு மட்டும் கையெழுத்து போடத் தெரிந்திருந்தால் தேவாலயத்தில் கூட்டி பெருக்கும் தொழிலாளியாகத்தான் இன்னும் இருந்திருப்பேன் " என்று கர்ஜித்தார்.

இது வெறும் கதையல்ல. குறைகூட ஒருநாளில் நிறைவாகலாம். நம்மில் பலருக்கு பல குறைகள் இருக்கும் அதை நினைத்து வருத்தபடுவது உண்டு. வருத்தபடுவதால் எந்த மாற்றமும் நிகழப்போதில்லை. அந்த குறையை நமது பலமாக மாற்ற என்ன செய்யலாம் என்று எண்ணி அதை செயல்படுத்தினால் வெற்றி நிச்சயம்...

9/09/2010

ஆத்ம ஜயம்

ஆத்ம ஜயம்

கண்ணில் தெரியும் பொருளினைக் கைகள்


கவர்ந்திட மாட்டாவோ?-அட

மண்ணில் தெரியுது வானம்,அதுநம்

வசப்பட லாகாதோ?

எண்ணி யெண்ணிப் பல நாளு முயன்றிங்

கிறுதியிற் சோர்வோமோ,

விண்ணிலும் மண்ணிலும் கண்ணிலும் எண்ணிலும்

மேவு பராசக்தியே!

என்ன வரங்கள்,பெருமைகள்,வெற்றிகள்

எத்தனை மேன்மைகளோ!

தன்னை வென்றா லவை யாவும் பெறுவது

சத்திய மாகுமென்றே

முன்னை முனிவர் உரைத்த மறைப் பொருள்

முற்றுமுணர்ந்த பின்னும்

தன்னை வென்றாளும் திறமை பெறாதிங்கு

தாழ்வுற்று நிற்போமோ?



மகாகவி பாரதியார் கவிதை