ஜென் கதைகளில் கூரப்படும் ஒவ்வரு கருத்துகளும் மிக ஆழமாக உணரக்கூடிய கருத்துகள் ஆகும். வாழ்கையில் எந்த ஒருகட்டதிலும் அவைகள் நமக்கு ஒரு தீர்வை தரக்குடியவையாகும். ஜென் துறவிகளின் கதைகளில் நகைச்சுவைக்கும் ஒரு தனி இடமுண்டு
- ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தார் அவர் எப்போதும் சிரித்துகொண்டே இருபதோடு மற்றவர்களையும் சிரிக்கவைதுக்கொண்டிறுப்பார். மக்களும் அவர் மீது அன்பும், மரியாதையும் வைத்திருந்தார்கள். ஒரு நாள் அவர் மரணப்படுக்கையில் இருந்தார் மக்கள் அவரை சுற்றி நின்று அழுதவண்ணம் இருந்தனர். அப்போது அங்கு நின்றிருந்த ஒரு சீடனை அழைத்து. தன் சிதைக்கு தீ மூட்டும்முன் தன்னுடைய உடம்பை நீரில் நனைத்து விட வேண்டாம் என்று கூரிவிட்டு இறந்துவிட்டார் மக்களும் சீடர்களும் அழுதபடியே அவரது சிதைக்கு நெருப்பு மூட்டினர் அப்போது அவரது உடம்பிலிருந்து மறைத்து வைக்கபட்டிருந்த பட்டாசுகளும், வானவேடிக்கைகளும் வெடித்தது சோகமாய் இருந்த மக்கள் சிரித்து விட்டார்கள். இறந்த பின்னும் மக்களை சிரிக்க வைத்ததால் அவருக்கு சிரிப்பு புத்தர் என்றே அழைக்க ஆறாம்பிதுவிட்டார்கள்.
*********************************************************************************
ஒரு முறை ஒரு புத்த துறவி கடற்கரையில் அமர்ந்து கண் மூடி மந்திரம் சொல்லிகொண்டிருந்தார்.அப்போது அவர் மீது பல பறவைகள் வந்து அமர்துகொண்டும், விளையாடிக்கொண்டும் இருந்தது. அதை பார்த்த சிறுவன் அந்த துறவியிடம் எப்படி பறவைகள் உங்கள் மீது வந்து பயமில்லாமல் அமர்கின்றன என்று கேட்டான் அதற்கு அந்த துறவி நான் அந்த பறவைகளை துன்புறுத்தவில்லை அதனால் அவைகள் என்மீது அமர்கின்றன என்றார். அப்போது அந்த சிறுவன் எனக்கு ஒரு பறவையை நாளை பிடித்து தரமுடியுமா? என்று கேட்டான். அதற்கு அந்த துறவி சரி என்று ஒப்புக்கொண்டார். அடுத்தநாள் அந்த துறவி மனதில் நிம்மதியற்றுபோய் அந்த பறவையை சிறைபிடிக்க நினைத்தார் எப்போதும் அவர்மீது வந்து அமரும் பறவைகள் ஒன்று கூட அவர் பக்கத்தில் அமரவில்லை. அந்த துறவி அந்த பறவைகளை சிறைபிடிக்கும் நினைப்பு அந்த பறவைகளுக்குள் எழுந்து எந்த பறவையும் வந்து அமரவில்லை. பிறகு தான் செய்த,செய்ய நினைத்த தவறை நினைது வருந்தினார் அந்த துறவி.
-Partha.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக