சும்மா இருப்பது சுலபமா ?
ஒரு ஊர்ல ஒரு கோவில்
இருந்தது , அரசாங்கம் அந்த கோயிலை பராமரித்து வந்தது . அதிகாரிகள் அவ்வப்போது வந்து
கணக்கு வழக்குகளை சரி பார்ப்பது வழக்கம் .
அந்த வகையில் , ஒரு சமயம் அரசாங்க
அதிகாரி அங்கே வந்தார் . கோயில் நிர்வாக அதிகாரி கணக்கு புத்தகங்களையும் மற்ற
பதிவேடுகளையும் எடுத்து அவர் முன்னால் வைத்தார்
வந்த
அதிகாரி , கோயில் செலவு கண்ணுக்கு பார்த்து கொண்டு வந்தார் ." சும்மா இருக்கும்
சாமியாருக்கு ஒரு பட்டை சோறு ".. என்று தினசரி செலவு பட்டியலில்
எழுதபட்டிருந்தது.
அதை பார்த்த அவர் " சும்மா இருக்கிறவருக்கு எதுக்காக சோறு
போடணும் ? அதை உடனே நிறுத்துங்கள் ! என்று ஆணையிட்டார் .
உடனே ஆலய ஊழியர்கள்
, அதிகாரிகளை நெருங்கி மெல்ல சொன்னார்கள் : "ஐயா சும்மா இருப்பது என்பது அவ்வளவு
சுலபமான காரியமல்ல ... அதனால் தான் அவருக்கு சோறு வழங்குகிறோம் !"
இந்த
விளக்கம் அந்த அதிகாரிக்கு திருப்தி அளிக்கவில்லை . எனவே ,அதுபற்றி ஒன்றும்
சொல்லாமல் வீட்டுக்கு வந்து விட்டார் , வந்த பிறகு ஒரு சாய்வு நாற்காலியில்
உக்காந்து யோசிக்க ஆரம்பித்தார்
" சும்மா இருப்பது என்ன அவ்வளவு கடினமான
காரியமா ? கொஞ்ச நேரம் நாமும்தான் சும்மா இருந்து பார்ப்போமே !" முன்று பார்த்தார்
. மனம் அலைய ஆரம்பித்தது ....அடங்க மறுத்தது .
சரி , கொஞ்ச நேரம் கண்களை
மூடி தியானம் செய்து பார்க்கலாம் , முன்றார் ' வயிறு பசிக்கிறது போலிருக்கிறதே !
என்று நினைத்தார்
ஒரு புத்தகத்தை எடுத்து புரட்டினார் கவனத்தை
அதில் செலுத்தினார் . காகம் ஒன்று எங்கோ கத்துகிற சதம் அவர் காதில் விழுந்தது .
கண்களையும் காதுகளையும் கட்டுபடுத்த முன்றார்
மனம் எதிர்காலத்தை பற்றி
யோசிக்க ஆரம்பித்தது . மகளுக்கு மாப்ளை தேட வேண்டும் ,மகனுக்கு வேலை தேட வேண்டும் ,
மறுபடி எதையும் நினைக்காமல் தியானம் செய்ய
முயன்றார்திடீர் என ஒரு மணம் வந்து
மூக்கை தொடுகிறது . கண் விழித்து பார்கிறார்
மனைவு கொண்டு வந்து வைத்து விட்டு
போன சூடான காபி எதிரே மேஜை மீது இருக்கிறது .அதை எடுத்து
குடிக்க ஆரம்பித்தார்
" மனம் - தியானம் இரண்டும்
ஒன்றுகொன்று சம்பந்தம் உள்ளது " என்று நினைக்கிறார் . அது அப்படி அல்ல : மனம்
முடிந்து போகிற இடத்தில தான் தியானம் ஆரம்பமாகிறது
எனவே , தியானம் இருக்கிற இடத்தில மனம் இல்லை . மனம் செயல்
படுகின்ற வரையில் தியானமும் அரம்பமவதில்லை "
அதிகாரி திணறி போனார் .
அவருக்கு ஊழியர்கள் கட்டுபடுகிறார்கள் , உள்ளே இருக்கிற அவர் மனம் கட்டுப்பட
மறுக்கிறது
அதிகாரி அலைபாய்கிற மனதை அடக்க முயன்று , அது
முடியாமல் சோர்ந்து போனார். " சும்மா இருப்பது எவ்வளவு பெரிய விஷயம் ! என்பது
அவருக்குபுரிந்தது
உடனே
மறுபடியும் புறப்பட்டு அந்த கோவிலுக்கு போனார், பதிவேட்டை கொண்டு வர சொன்னார்.
அதில் இப்படி எழுதினார் : " சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு
!"
தென்கச்சி கோ சுவாமிநாதன்.
-Partha.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக