10/19/2010

வாய்விட்டுச் சிரியுங்கள்; நோய் விட்டுப் போகும்!

'எங்கே நிம்மதி' என்று புலம்பித்திரியும் இளைஞர்களைப் பார்க்கும் போது 'புதிய பறவை' திரைப்படத்தில் வரும் பாடல்தான் ஞாபகத்துக்கு வருகிறது.​ எந்திர வாழ்க்கையாக மாறிப்போனதால் மனிதன் நிம்மதியைத் தொலைத்துவிட்டான்.​ மன அழுத்தத்துக்கு ஆளாகி இளைஞர்களும்,​​ இளம்பெண்களும் தாம்பத்திய வாழ்வில் தோல்வியைத் தழுவுவதும் எதார்த்தமாகிப்போனது.
​ இப்படி மனித சமுதாயத்தையே ஆட்டுவிக்கும் மன அழுத்தம் என்றால் என்ன,​​ அது எப்படி ஏற்படுகிறது,​​ ​ மன அழுத்தத்துக்கு ஆட்பட்டுவிட்டால் அதில் இருந்து எப்படி எளிதில் மீளுவது ​ போன்றவை குறித்து கரூரைச் சேர்ந்த பிரபல மனநல மருத்துவரும்,​​ உளவியல் நிபுணருமான செந்தில்வேலன் இதோ நம்மிடம் பகிர்ந்து கொண்டது:​​
மன அழுத்தம் என்றால் என்ன?​​
ஏதா​வது ஒரு விஷ​யம் மனி​தர்​க​ளின் தினசரி வாழ்வில் ஒரு மாற்றத்தையோ அல்லது ​மனிதர்கள் சமாளிக்கும் திறமைக்கு ஒரு சவாலையோ ஏற்படுத்தும் போது உணரப்படும் விரும்பத்தகாத உணர்வையே மன அழுத்தம் என்கிறோம்.
பொதுவாக மன அழுத்தம் எப்படி வெளிப்படும்?​​
மன அழுத்​தம் கோப​மாக,​​ பய​மாக,​​ ​ இயலாமையாக,​​ கவலையாக,​​ வெறுப்பாக,​​ அமைதியின்மையாக,​​ கவனமின்மையாக-எப்படி வேண்டுமானாலும் வெளிப்படலாம்.
மன அழுத்தம் யாருக்கு ஏற்படுகிறது?​​
மன அழுத்​தம் சிறி​யவர்,​​ பெரியவர் என்று வயது வித்தியாசமின்றி யாருக்கு வேண்டுமானாலும் ​ ஏற்படலாம்.​ இன்றைய காலக் கல்விச் சுமையால் குழந்தைகளுக்குகூட மன அழுத்தம் ஏற்படலாம்.​ ​ ஏழை-பணக்காரர்,​​ ஆண்-பெண்,​​ படித்தவர்-படிக்காதவர் என்ற வித்தியாசமின்றி யாருக்கும் மன அழுத்தம் ஏற்படும்.
மன அழுத்தம் ஏற்படக் காரணம் என்ன?​​
மன அழுத்​தம் பெரும்​பா​லும் குடும்ப உற​வுகளில் ஏற்படும் கசப்புகள்,​​ ஏமாற்றங்கள்,​​ எதிர்பார்ப்புகள்,​​ நிறைவேறாத ஆசைகள் ஆகியவற்றாலும் சமுதாய சூழ்நிலைகளாலும் மற்றும் வேலை பார்க்கும் இடங்களில் ஏற்படும் பிரச்னைகளாலும் ஏற்படும்.
நீங்கள் ஒரு உளவியல் நிபுணர்.​ ஆக உளவியல் ரீதியாக மன அழுத்தத்துக்கு எவை காரணங்களாக கண்டறியப்பட்டுள்ளன?​​
​ உள​வியல் ரீதியாக எடுத்துக்கொண்டால் மன விரக்தி,​​ வாழ்வில் ஏற்படும் திடீர் மாற்றம்,​​ ​முரண்பாடுகள்,​​ நிர்பந்தம் ஆகியவையே மன அழுத்தத்துக்கு காரணம்.
அதாவது ஒரு இலக்கை அடைய பலமுறை முயன்றும் தோல்வி ஏற்பட்டால் மன விரக்தி ஏற்படுகிறது.​ பெரும்பாலான தருணங்களில் நாம் எதார்த்தம் இல்லாத இலக்குகள்,​​ ​ எதிர்பார்ப்புகள்,​​ ஒப்பீடுகளை மனதில் வைத்து விரக்தி அடைகிறோம்.
​ அமைதியான நதியில் சீரான வேகத்தில் நிதானமாகச் சென்று கொண்டிருக்கும் படகைப் போன்ற நம் வாழ்வில் திடீரென ஏற்படும் மாற்றங்கள் நம்மை புரட்டிப் போடுகின்றன.​ ​ நம்முடைய பொறுமைக்கும்,​​ சிக்கலை சமாளிக்கும் திறமைக்கும் சவாலாக உள்ளன.
அதேபோல அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும்,​​ அனுபவிக்கும் முரண்பாடுகள் கணக்கிலடங்கா.​ விழித்தெழுவதில் இருந்து உறங்கும்வரை முரண்பாடுகளோடு போராட வேண்டியுள்ளது.​ ஒன்றுக்கு மேற்பட்ட ஆசைகள்,​​ விருப்பங்கள் ஒரே நேரத்தில் வெளிப்பட போட்டியிடும்போது முரண்பாடு ஏற்படுகிறது.
அதேபோல உலகில் எல்லோரும் ஏதாவது நிர்பந்தத்துக்கு ஆளாகி நமக்கு பிடிக்கிறதோ இல்லையோ சில காரியங்களைச் செய்தாக வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகிறோம்.​ ​ சமூக அந்தஸ்துக்காக தகுதிக்கு மீறி கடனை வாங்கி ஆடம்பர வீடு கட்டுகிறோம்.​ கார் வைத்துக் கொள்கிறோம்,​​ கடனை வாங்கியாவது லட்சத்தைப் பறிக்கும் பள்ளிகளில் குழந்தைகளைப் படிக்க வைப்பதை கெüரவமாக நினைக்கிறோம். இதனால் ஏற்படும் பொருளாதார சுமைகளால் மன உளைச்சலுக்கு ஆளாகிறோம்.
​ மன அழுத்தத்தை நம் அருகிலேயே வராமல் துரத்தி அடிக்க முடியுமா?​​
இன்​றை​யச் சூழலில் மன அழுத்தத்தை யாராலும் தவிர்க்க முடியாது.​ ஆனால் குறைக்கலாம்,​​ சமாளிக்கலாம்,​​ தாங்கிக் கொள்ளலாம்.​ அப்படி ஒருவர் தனக்கு மன அழுத்தமே வருவதில்லை என்று கூறினால் அவர் சமூக ஒட்டுதலில் இல்லை எனக் கூறலாம்.
அப்படியென்றால் மன அழுத்தத்தை எப்படி குறைப்பது?​​
ஆழ்​ம​னதில் உள்ள தவறான கருத்துக்களையும் அவற்றால் நாம் உலகைப் பார்க்கும் கோணத்தில் ஏற்படும் விகாரங்களையும் அறிந்து கொண்டால் மன அழுத்தத்தைக் குறைக்கலாம்.
​ ​ நகைச் சுவை மன உளைச்சலைப் போக்கும் அரு மருந்து.​ அதனால்தான் வள்ளுவரே இடுக்கண் வருங்கால் நகுக என்றார்.​ ​ கடினமான சூழ்நிலையை நகைச்சுவை தலைகீழாக மாற்றிவிடும்.​ இதனால்தான் இன்று பல நகரங்களில் நகைச்சுவை மன்றங்களை ஏற்படுத்தியுள்ளனர்.
​ ​ நமக்கு நெருக்கமானவர்களிடம்,​​ நம்மை புரிந்து கொள்பவர்களிடம் மனம் விட்டுப் பேசி நமது மனப்பாரத்தை இறக்கிவைக்கலாம்.​ பல நேரங்களில் வெடித்து வரும் அழுகை மனப் பாரத்தை கழுவி விடுகிறது.​ ஆழ்ந்த ஓர் அழுகைக்குப்பின் மனம் மழை பெய்த வானம் போல தெளிவாகவும்,​​ லேசாகவும் மாறிவிடுகிறது.
​ ​ யோகா உடற்பயிற்சி,​​ ஆழ்மன தியானம்,​​ உடல் தளர்வுப் பயிற்சிகள்,​​ சாதாரண உடற்பயிற்சி ஆகியவற்றை தினசரி வாழ்வில் கடைப்பிடிக்கும் போதும் நம் மன உளைச்சல் குறைகிறது.
​ ​ ​ சுருங்கச் சொல்வதானால் நேர்மையாக,​​ அடுத்தவரின் உணர்வுகளை மதிப்பவராக,​​ நல்ல பழக்க வழக்கங்கள் ​ உடையவராக,​​ எதையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் உள்ளவராக,​​ தமது எல்லைகளை அறிந்தவராக,​​ நிதானமானவராக,​​ உணர்ச்சிவசப்படாதவராக இருக்கும்பட்சத்தில் நமக்கு ஏற்படும் மன உளைச்சலை எளிதில் சமாளித்து இனிதான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள இயலும்.
 
Thanks :- கதிர்

10/03/2010

ஜென் கதைகள்

ஒரு அரசன் தன நான்கு முக்கிய அமைச்சர்களைக் கூப்பிட்டு அவர்களில் ஒருவரை முதல் அமைச்சராக நியமிக்கவிருப்பதாகவும் அதற்கு அவர் வைக்கும் தேர்வில் தேற வேண்டும் என்றும் கூறினார்.தேர்வு இதுதான் கணித முறையில் அமைக்கப்பட்ட ஒரு பூட்டை யார் விரைவில் திறக்கிறார்களோ அவரே வெற்றியாளர்.மூன்று அமைச்சர்கள் அன்று இரவு முழுவதும் கணிதம்பற்றிய பல புத்தகங்களைப் படித்துக் கொண்டிருந்தனர்.ஒருவர் மட்டும் நிம்மதியாகத் தூங்கிவிட்டார்.மறுநாள் காலை அரசவையில் பூட்டு கொண்டு வரப்பட்டது.பூட்டின் அமைப்பு எல்லோருடைய படபடப்பையும் அதிகரித்தது.ஓலைச்சுவடிகளைக் கொண்டு வந்திருந்த மூன்று அமைச்சர்கள் அவற்றை முன்னும் பின்னும் புரட்டிப் பார்த்தார்கள்.ஆனால் அப்பூட்டைத் திறக்கும் வழி அவர்களுக்குத் தெரியவில்லை.இரவில் நன்கு தூங்கிய அமைச்ச மெதுவாக எழுந்து வந்து பூட்டை நன்கு ஆராய்ந்தார்.கூர்ந்து கவனித்ததில் பூட்டு பூட்டப்படவே இல்லை  என்பது அவருக்குப் புலனாயிற்று.சாவியே இல்லாமல் எந்த கணித சூத்திரமும் இல்லாமல் பூட்டை எளிதாக அவர் திறக்க, மன்னர் அவரையே முதல் அமைச்சர் ஆக்கினார்.
பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமானால்,முதலில் பிரச்சினை என்னவென்பதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.பிரச்சினையைப் புரிந்து கொள்ள, மனம் சமன் நிலையில் இருக்க வேண்டும்.

                                                      ************************
புத்த மத வேதங்களிலுள்ள கருத்துக்களைக் கொண்டு வரையப்பட்டஓவியம்  ஒன்றை ஒரு புத்த சந்நியாசி எரித்துக் கொண்டிருந்தார்.அதைப் பார்த்த ஒரு சீடர் அவரிடம் கேட்டார்,'குருவே,என்னே காரியம் செய்கிறீர்கள்?இந்த வேதன்களைத்தானே எப்போதும் எங்களுக்கு பாடமாகச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தீர்கள்.அவைதான் வாழ்வைப் பிரதிபலிப்பவை என்று  கூறினீர்கள்?இப்பொது மட்டும் ஏன் அதை எரிக்கிறீர்கள்?'குரு சிரித்துக்கொண்டே சொன்னார்,''நான் வீட்டை அடைந்துவிட்டேன்.இனி எனக்கு வரைபடம் தேவையில்லை.''ஞானம் அடைந்தவர்களுக்கு எந்த வேதமும் தேவையில்லை.

10/02/2010

Life and Yoga - Sri Aurobindo

There are two necessities of Nature's workings which seem always to intervene in the greater forms of human activity, whether they belong to our ordinary fields of movement or seek those exceptional spheres and fulfilments which appear to us high and divine. Every such form tends towards a harmonised complexity and totality which again breaks apart into various channels of special effort and tendency, only to unite once more in a larger and more puissant synthesis. Secondly, development into forms is an imperative rule of effective manifestation; yet all truth and practice too strictly formulated becomes old and loses much, if not all, of its virtue; it must be constantly renovated by fresh streams of the spirit revivifying the dead or dying vehicle and changing it, if it is to acquire a new life. To be perpetually reborn is the condition of a material immortality. We are in an age, full of the throes of travail, when all forms of thought and activity that have in themselves any strong power of utility or any secret virtue of persistence are being subjected to a supreme test and given their opportunity of rebirth. The world to-day presents the aspect of a huge cauldron of Medea in which all things are being cast, shredded into pieces, experimented on, combined and recombined either to perish and provide the scattered material of new forms or to emerge rejuvenated and changed for a fresh term of existence. Indian Yoga, in its essence a special action or formulation of certain great powers of Nature, itself specialised, divided and variously formulated, is potentially one of these dynamic elements of the future life of humanity. The child of immemorial ages, preserved by its vitality and truth into our modern times, it is now emerging from the secret schools and ascetic retreats in which it had taken refuge and is seeking its place in the future sum of living human powers and utilities. But it has first to rediscover itself, bring to the surface the profoundest reason of its being in that general truth and that unceasing aim of Nature which it represents, and find by virtue of this new self-knowledge and self-appreciation its own recovered and larger synthesis. Reorganising itself, it will enter more easily and powerfully into the reorganised life of the race which its processes claim to lead within into the most secret penetralia and upward to the highest altitudes of its own existence and personality.
     In the right view both of life and of Yoga all life is either consciously or subconsciously a Yoga. For we mean by this term a methodised effort towards self-perfection by the expression of the potentialities latent in the being and a union of the human individual with the universal and transcendent Existence we see partially expressed in man and in the Cosmos. But all life, when we look behind its appearances, is a vast Yoga of Nature attempting to realise her perfection in an ever increasing expression of her potentialities and to unite herself with her own divine reality. In man, her thinker, she for the first time upon this Earth devises self-conscious means and willed arrangements of activity by which this great purpose may be more swiftly arid puissantly attained. Yoga, as Swami Vivekananda has said, may be regarded as a means of compressing one's evolution into a single life or a few years or even a few months of bodily existence. A given system of Yoga, then, can be no more than a selection or a compression, into narrower but more energetic forms of intensity, of the general methods which are already being used loosely, largely, in a leisurely movement, with a profuser apparent waste of material and energy but with a more complete combination by the great Mother in her vast upward labour. It is this view of Yoga that can alone form the basis for a sound and rational synthesis of Yogic methods. For then Yoga ceases to appear something mystic and abnormal which has no relation to the ordinary processes of the World-Energy or the purpose she keeps in view in her two great movements of subjective and objective self-fulfilment; it reveals itself rather as an intense and exceptional use of powers that she has already manifested or is progressively organising in her less exalted but more general operations.
     Yogic methods have something of the same relation to the customary psychological workings of man as has the scientific handling of the natural force of electricity or of steam to the normal operations of steam and of electricity. And they, too, are formed upon a knowledge developed and confirmed by regular experiment, practical analysis and constant result. All Rajayoga, for instance, depends oil this perception and experience that our inner elements, combinations, functions, forces, can be separated or dissolved, can be new-combined and set to novel and formerly impossible workings or can be transformed and resolved into a new general synthesis by fixed internal processes. Hathayoga similarly depends on this perception and experience that the vital forces and functions to which our life is normally subjected and whose ordinary operations seem set and indispensable, can be mastered and the operations changed or suspended with results that would otherwise be impossible and that seem miraculous to those who have not seized the rationale of their process. And if in some other of its forms this character of Yoga is less apparent, because they are more intuitive and less mechanical, nearer, like the Yoga of Devotion, to a supernal ecstasy or, like the Yoga of Knowledge, to a supernal infinity of consciousness and being, yet they too start from the use of some principal faculty in us by ways and for ends not contemplated in its everyday spontaneous workings. All methods grouped under the common name of Yoga are special psychological processes founded oil a fixed truth of Nature and developing, out of normal functions, powers and results which were always latent but which her ordinary movements do not easily or do not often manifest.
     But as in physical knowledge the multiplication of scientific processes has its disadvantages, as that tends, for instance, to develop a victorious artificiality which overwhelms our natural human life under a load of machinery and to purchase certain forms of freedom and mastery at the price of an increased servitude, so the preoccupation with Yogic processes and their exceptional results may have its disadvantages and losses. The Yogin tends to draw away from the common existence and lose his hold upon it; he tends to purchase wealth of spirit by an impoverishment of his human activities, the inner freedom by an outer death. If he gains God, he loses life, or if he turns his efforts outward to conquer life, he is in danger of losing God. Therefore we see in India that a sharp incompatibility has been created between life in the world and spiritual growth and perfection, and although the tradition and ideal of a victorious harmony between the inner attraction and the outer demand remains, it is little exemplified. In fact, when a man turns his vision and energy inward and enters on the path of Yoga, he is supposed to be lost inevitably to the great stream of our collective existence and the secular effort of humanity. So strongly has the idea prevailed, so much has it been emphasized by prevalent philosophies and religions that to escape from life is now commonly considered as not only the necessary condition, but the general object of Yoga. No synthesis of Yoga can be satisfying which does not, in its aim, reunite God and Nature in a liberated and perfected human life or, in its method, not only permit but favour the harmony of our inner and outer activities and experiences in the divine consummation of both. For man is precisely that term and symbol of a higher Existence descended into the material world in which it is possible for the lower to transfigure itself and put on the nature of the higher and the higher to reveal itself in the forms of the lower. To avoid the life which is given him for the realisation of that possibility, can never be either the indispensable condition or the whole and ultimate object of his supreme endeavour or of his most powerful means of self-fulfilment. It can only be a temporary necessity under certain conditions or a specialised extreme effort imposed on the individual so as to prepare a greater general possibility for the race. The true and full object and utility of Yoga can only be accomplished when the conscious Yoga in man becomes, like the subconscious Yoga in Nature, outwardly conterminous with life itself and we can once more, looking out both on the path and the achievement, say in a more perfect and luminous sense: "All life is Yoga."
 - Life and Yoga  - Sri Aurobindo

10/01/2010

ஜென் கதைகள்

போர்வீரன் ஒருவன் ஜென் குருவை அணுகிக் கேட்டான். "ஐயா, சொர்க்கம் அல்லது நரகம் என்று உண்மையிலேயே ஏதாவது இருக்கிறதா?'' அவனுடைய கேள்விக்குப் பதில் சொல்லாமல் அவனைப் பார்த்துக் கேட்டார் குரு-
"நீ உண்மையிலேயே ஒரு போர்வீரனா? பார்த்தால் பிச்சைக்காரன் போல இருக்கிறாய். உன்னைத் தன் படைவீரனாக நியமித்திருக்கும் உன்னுடைய அரசன் எப்பேர்ப்பட்ட பிச்சைக்காரனாக இருப்பான்?''
போர்வீரன் கடுங்கோபத்துடன் வாளை உறையில் இருந்து உருவத் துவங்கினான்.
ஓஹோ. வாளை வைத்திருக்கிறாயோ? அதற்கு என் தலையை சீவும் வல்லமை இருக்கிறதா என்று கேட்டார் குரு. அவன் ஏறத்தாழ அவர் தலையை சீவத் தயார் ஆனான். அவன் கையைப் பிடித்து நிறுத்தி குரு சொன்னார்
"இப்போது நரகத்தின் கதவுகள் திறக்கின்றன''
அவன் ஒருவாறு சமாளித்து தலைகுனிந்து வெட்கி அவரை வணங்கி நின்றான். குரு சொன்னார்-
"இப்போது சொர்க்கத்தின் கதவுகள் திறந்து விட்டன''.
                                      ********************
 புத்தரின் தலைமை மடாலயத்தில் நிகழ்ந்த சுவையான சம்பவம். அடிப்படை சந்நியாஸப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த சந்நியாஸிகள், தியானத்தை மக்களுக்குக் கற்றுத்தந்து, மக்கள் முன்னேற்றம் பெறுவதற்காக நாடு முழுவதும் சேவைக்காக புறப்படும் நேரம் வந்தது. அதில் பூர்ணகாஷ்யபா எனும் சந்நியாஸிக்கு மட்டும் எங்கு செல்வது என்று சொல்லப்படவில்லை.
பூர்ணகாஷ்யபா நேரடியாய் புத்தரிடமே சென்று கேட்டார், “”நான் எங்கு செல்லட்டும்?”
புத்தர் சிரித்தபடி சொன்னார், “”நீயே தேர்வு செய்யப்பா.” இந்தியாவின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு தான் செல்ல விரும்புவதாக சொன்னார். சீடனைப் பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டவராய் புத்தர் கேட்டார், “”அந்தப் பகுதிக்கா? அங்கே வாழும் மனிதர்கள் மிகவும் முரடர்கள். சின்ன சின்ன பிரச்னைக்கெல்லாம் அடிதடி சண்டையில் இறங்குபவர்கள், கொஞ்சம் கூட பக்தியோ, தியான உணர்வோ இல்லாதவர்கள். இப்படி பொல்லாதவர்களிடமா போக விரும்புகிறாய்?”

“ஆமாம்” என்று தைரியத்தோடு சொன்ன சீடனிடம் புத்தர் சொன்னார்…
“உன்னிடம் மூன்று கேள்விகளை கேட்க விரும்புகின்றேன். இந்த மூன்று கேள்விக்கும் சரியான பதில் சொல்லிவிட்டால் நீ போகலாம்.”
“ம்…”
“முதல் கேள்வி, அங்கே சென்ற பிறகு உன்னை வரவேற்பதற்கு பதில் அவமானப்படுத்தினால் என்ன செய்வாய்?”

“ரொம்ப ஆனந்தப்படுவேன். ஏனென்றால், அவர்கள் என்னை அடிக்கவில்லை; உதைக்கவில்லை.
திட்டுவதோடு நிறுத்திக் கொண்டார்களே; மிகவும் நல்லவர்கள்… என்று நன்றி சொல்வேன்.”
“இரண்டாவது கேள்வி. ஒருவேளை திட்டாமல் அடித்து உதைத்தால் என்ன செய்வாய்?”
“அவர்கள் மிகவும் நல்லவர்கள். அதனால்தான் என்னைக் கொல்லாமல் விட்டுவிட்டார்கள். வெறுமனே அடித்ததோடு நிறுத்திக் கொண்டார்களே! என ஆனந்தப்படுவேன்.”

“மூன்றாவது கேள்வி. ஒருவேளை உன்னைக் கொன்றுவிட்டால் என்ன செய்வாய்?”
“ஆஹா இன்னும் ஆனந்தப்படுவேன். மொத்தமாக இந்த வாழ்க்கையில் இருந்தே எனக்கு சுதந்திரம் தந்துவிட்டார்கள். இனி எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை என்று மிகவும் ஆனந்தப்படுவேன்” என்று சொன்னதும்,

“நன்றாக தேறிவிட்டாய். அங்கு மட்டுமல்ல எங்கு சென்றாலும் நீ வாழ்ந்து விடுவாய். எதனாலும் இனி உன்னை வீழ்த்தமுடியாது. எப்போதும் ஆனந்தமாயிருக்க பக்குவப்பட்டுவிட்டாய். எங்கு சென்றாலும் நல்லாயிருப்பாயப்பா. போய் வா” என்று ஆசிர்வதித்து அனுப்பினார் புத்தர்.

எந்தச் சூழலையும் ஆனந்தமாக அணுகக் கற்றுக் கொண்டால், எந்த சூழலையும் ஆனந்தமயமாக்கிட முடியும். இல்லாவிட்டால் ஆனந்தமயமான சூழல்கள் வாய்த்தால்கூட, அதிலும் ஏதாவது துக்கம் இருந்து கொண்டே இருக்கும்.
தொகுப்பு :- Sarathi, Saudi