3/07/2013

வீரத்துறவி விவேகானந்தர் சிந்தனைகள்







ஜனவரி 12. 1863-ம் ஆண்டில் பிறந்த விவேகானந்தர் இளமையிலேயே பகுத்தறிவும், ஆராய்ச்சி மனப்பான்மையும் கொண்டவராக விளங்கினார். கடவுளைக் காண வேண்டும் என்ற தேடல் இறுதியில் குருதேவர் ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடராக அவரை ஆக்கியது. இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்கள் படும் துயரங்களை நேரில் கண்ட விவேகானந்தர், அவர்களது துயர் தீர்ப்பதையே தமது வாழ்நாள் லட்சியமாகக் கொண்டார். அதற்காகவே உழைத்தார். தமது வாழ்க்கை முழுவதையும் தேச நலனுக்காகவே அர்ப்பணித்தார். அமெரிக்க நாட்டுக்குப் பயணம் செய்து சர்வ சமய மகாநாட்டில் கலந்து கொண்டார். தனது பேச்சால் அங்குள்ளவர்களைக் கவர்ந்தார். அதன் பின் ஐரோப்பாவின் பல பகுதிகளுக்கும் பயணம் செய்து, இந்தியாவின் புகழைப் பரப்பினார். ராமகிருஷ்ண மடத்தை நிறுவி அதன் மூலம் மக்கள் தொண்டாற்றினார். 1902 ம் வருடம், ஜூலை மாதம் நான்காம் தேதி விவேகானந்தர் மகா சமாதி ஆனார் என்றாலும் அவர் விட்டுச் சென்ற சிந்தனைகள் என்றும் நினைவு கூரத் தக்கவை.
சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த நாள் கொண்டாடப்படும் இந்த மாதத்தில் (ஜனவரி 12) அவரது சிந்தனைகள் சிலவற்றைப் பார்ப்போமா?
 
ஏழைகளும் வறியவர்களும் படும் துன்பத்தையும் துயரத்தையும் கண்டு யார் உள்ளம் கசிந்து உருகுகிறதோ, யாருக்கு அவர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உடனடியாக ஏற்படுகிறதோ அவர்களே உண்மையான தேச பக்தர்கள். தேச சேவை செய்வதற்குத் தகுதியானவர்கள். அவர்களே மகாத்மாக்கள்.
 
 கடவுள் ஒவ்வொரு ஜீவனிலும் இருக்கிறார். இதைத் தவிட தனியாக வேறு ஒரு கடவுள் இல்லை. மக்களுக்கு ஒருவன் செய்யும் சேவை அந்த மகேசனுக்கே செய்யும் சேவையாகும். இதுவே உண்மை.
 
 யார் ஒருவர் எதைப் பெறுவதற்கு தகுதியாக இருக்கிறாரோ அதை அடையவிடாமல் தடுப்பதற்கு, பிரபஞ்சத்தில் உள்ள எந்த சக்தியாலும் முடியாது.
 
 உண்மை, தூய்மை, சுயநலமின்மை இது மூன்றும் யாரிடமெல்லாம் இருக்கிறதோ அவர்களை நசுக்கக் கூடிய சக்தி விண்ணுலகு, மண்ணுலகு என எந்த உலகிலும் இல்லை. ஏன் பிரபஞ்சமே எதிர்த்து நின்றாலும் கூட அவர்களை வெல்ல முடியாது.
 
 உங்கள் வாழ்க்கை சிறந்ததாகவும், தூய்மை உள்ளதாகவும் இருந்தால் மட்டுமே நீங்கள் வாழும் சமுதாயம் தூய்மை உடையதாக இருக்கும். ஆகவே முதலில் உங்களை நீங்கள் எண்ணத்தாலும் செயலாலும் தூய்மைப் படுத்திக் கொள்வது அவசியம்.
 
 சிந்தித்து செயலாற்றத் தெரிந்தவன் அதன் வழிச் செல்கிறான். மற்றவன் விதியைக் குறை சொல்கிறான். நம் விதியை நாமே தான் வகுத்துக் கொள்கிறோம். ஆகவே அதற்குப் பிறரைத் தூற்றுவதில் பயனில்லை.
 
 நீ கடவுள் நம்பிக்கை உடையவனோ, அல்லது இறைப்பற்று இல்லாத நாத்திகனோ, எதுவாக இருந்தாலும் சரி, உன் சுக துக்கங்களையும் சுயநலத்தையும் மறந்து உன் கடமைகளை நீ சரிவரச் செய்து வந்தால் போதும். அதுவே மிகப் பெரிய தேச சேவையாகும்.
 
 இல்லறமோ துறவறமோ எதை வேண்டுமானாலும் நீ தேர்ந்தெடு. ஆனால் இல்லறத்தில் இருக்கும் போது பிறருக்காக வாழ். துறவியாகிவிட்டால் பணம், பந்தம், புகழ், பதவி என அனைத்திலிருந்தும் விலகி இரு.
 
 துன்பங்களைக் கண்டு அஞ்சாதே. பெரிய மரத்தின் மீது புயல் காற்று மோதத் தான் செய்யும். கிளறி விடுவதால் நெருப்பு நன்கு எறியத் தான் செய்யும். தலையில் அடிபட்ட பாம்பு முன்னிலும் வேகமாக படமெடுக்கத் தான் செய்யும். ஆகவே துன்பங்களைக் கண்டு துவண்டு விடாமல், உறுதியாய் எதிர்த்து நில். உன்னால் எதுவும் முடியும்.
 
 எப்பொழுதும் விரிந்து மலர்ந்து கொண்டிருப்பது தான் வாழ்க்கை. மாறாக சுருங்கி, மடங்கிக் கொண்டிருப்பதே மரணமாகும். தன்னுடைய சுயநலத்தை மட்டும் கவனித்துக் கொண்டு, சுக போகத்துடன் வாழும் ஒருவனுக்கு நரகத்திலும் இடம் கிடைக்காது.
 
 மற்றவர்களுக்கு நன்மை செய்வதே தர்மம். தீமை செய்வதே பாவம். வலிமையும் ஆண்மையுமே வீரம். பலவீனமும் கோழைத்தனமுமே மரணம். மற்றவர்கள் மீது அன்பு செலுத்துவதே புண்ணியம். பிறரை வெறுத்து ஒதுக்குவதே பாவம்.
-Partha.

1/30/2013

The Story of Poosalar Nayanar

Poosalar, a poor , but educated man lived in Tiruninravur which is near modern day Chennai. He was an ardent devotee of Shiva and his most cherished desire was to build a temple for Lord Shiva. But he was a very poor man and he could not imagine building even a wall leave alone a temple. But Poosalar's desire only kept growing day by day. So he consulted the spiritual texts on the rules of building a temple. There are certain rules to be followed in designing a temple and those rules are strictly followed. So, Poosalar studied all those rules and started to construct a temple in his mind. Today he would build one portion, tomorrow, another. The next day he would build the entrance and the next day the doors. He kept on building the structure in his mind like this daily, deciding the places for the deities and deciding on the sculptures to be placed. This went on for a while and he even fixed a date for performing the "Kumbabhishekam" or inauguration of the temple. He would perform the Kumbabhishekam also in his mind.

In the meanwhile, a Pallava king named Rajasimha had built a grand temple for Lord Kailasanatha (Shiva) at Kancheepuram (near modern day Chennai). He had fixed a date for the grand inaugural of his temple and incidentally it was the same date as Poosalar had decided for his imaginary temple.

A few days before the consecration, Lord Shiva appeared in the dream of the Raja and expressed his inability to come for the consecration of the temple as he had to "attend Poosalar's temple function at Tiruninravur" on that same day.
The king was aghast that there was another temple superior to his that the Lord himself wanted to go. The very next day Rajasimha set out to Tiruninravur to see for himself how Poosalar's temple was better than his. But when he reached there and enquired, he came to know that Poosalar was a poor scholar not even capable of buying ten bricks. But since Lord Shiva himself had appeared in his dream, he called Poosalar and enquired about his temple. Poosalar reluctantly told him of his imaginary temple. The king was taken aback by the sheer devotion of this poor fellow. He immediately ordered a temple to be built at that very spot in the same design Poosalar had envisaged.

Poosalar was very grateful and thanked Lord Shiva. The temple is there still at Tiruninravur and is named "Hridayaleeswarar" temple (Lord of the heart) aptly. The Lord's name is Hridayaleeswarar.
- Partha

1/25/2013

இருதயாலீஸ்வரர் ஆலயம்

நீண்ட செஞ் சடையனார்க்கு நினைப்பினால் கோயிலாக்கி
பூண்ட அன்பு இடையறாத பூசலார் பொற்றாள் போற்றி
நின்றவூர் பூசல் அன்பன் நெடிதுநாள் நினைந்து செய்த
நன்றுநீ டாலயத்து நாளை நாம் புகுவோம் நீயிங்(கு)
ஒன்றிய செயலை நாளை யொழிந்துபின் கொளவாயென்று
கொன்றைவார் சடையார் தொண்டர் கோயில் கொண்டருளப் போந்தார்


கிபி ஏழாம் நூற்றாண்டு திருநின்ற ஊரில் மறையவர் குலத்தில் உதித்த பூசலார் என்னும் அடிகள் சிறந்த சிவ பக்தர், வறுமையான குடும்பத்தில் பிறந்தவர், வருந்திய தினமும் அங்குள்ள லிங்கம் ஒன்றைத் தரிசித்து வந்தார். கூரையற்று இறைவன் மழையிலும், வெயிலிலும் நனைவதைக்க கண்டு மனம் வருந்தி அந்த ஊரில் சிவ பெருமானுக்கு ஆலயம் கட்ட யாருமே முன் வராத நிலையில் தன்னுடைய வறுமை நிலையை மனதில் நினைத்து அதற்காக இவர் மனம் தளராமல்! எப்படியாகிலும் சிவபெருமானுக்கு ஒரு கோயில் கட்ட வேண்டும் என்னும் ஆசை நாளுக்கு நாள் அதிகமாகவே ஒரு வழியைக் கண்டுபிடித்தார் திரு பூசலார் அடிகள்.செங்கற்களாலும் கல்லாலும் கட்டினால்தான் கோயிலா என்னும் கேள்வி அவர் மனதிலே உதித்தது. கையில் பொருளில்லாமல் வெறும் மனக்கோட்டை கட்டினால் சிவன் கோயில் கட்ட முடியுமா என்று மற்றவர்கள் கேலி செய்தது அவர் மனதில் ஒரு வைராக்கியத்தை உருவாக்கியது.அவர்கள் கூறிய சொற்கள் அவர் மனதிலே ஒரு ஒளியை உண்டாக்கிற்று. அந்த சொற்களையே நினைத்துக்கொண்டிருந்த அவருக்குள் ஒரு ஞானம் பிறந்தது. அவர்கள் கூறிய மனக்கோட்டை என்னும் சொல் அவருள் பெரிய மாற்றத்தை விதைத்தது.அவர் மனக்கோட்டை கட்டத் தொடங்கினார். ஆமாம் சிவபெருமானுக்கு மனதாலேயே கோயில் அமைக்கத் தொடங்கினார். ஆமாம் அவர் மனதுக்குள்ளேயே சிவபெருமானுக்கு கோயில் கட்டுவதாக உறுதி எடுத்தார்.ஒரு இலுப்பை மரத்தடியில் அமர்ந்து சிவ பெருமானை நோக்கி வணங்கி விட்டு தன்னிடம் ஏராளமான செல்வம் இருப்பது போல் கற்பனை செய்துகொண்டு, சிவனை மனதில் இருத்தி மனதுக்குள்ளேயே அனைத்து வசதிகளும் கொண்ட ஆலயத்தை உண்மையிலேயே கட்ட எத்தனை ஆண்டுகள் ஆகுமோ அத்தனை ஆண்டுகள் மனதாலேயே ஆலையத்தை வடிவமைக்கத் தொடங்கினார். ஆமாம், மனதுக்குள்ளேயே வடிவமைத்தார். திட சிந்தனை தீர்க்கமான முடிவு, ஆழ்ந்த பக்தி, அயராத உழைப்பு இவைகளையே மூலதனமாக்கி செங்கல் இல்லாவிடின் என்ன? கற்கள் இல்லாவிடின் என்ன? பொருள் இல்லாவிடின் என்ன? இவைகள் இல்லாமலே கோயில் கட்ட முடியும் என்பதை நிரூபிக்கும் விதமாக தன் மனதுக்குள்ளேயே திட்டங்கள் தீட்டி, கோயிலை வடிவமைத்து முழுதாகக் கட்டி முடித்தார் மனதுக்குள்ளேயே.மனக்கோயில்! ஆமாம் மானசீகக் கோயில். முழுமையாகக் கட்டி முடித்த கோயிலுக்கு என்று குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று ஒரு நன்நாளையும் குறித்தார். அதே நேரம் காஞ்சியிலும் ஒரு ஆலயம் எழுந்துகொண்டிருந்தது.உலகுக்கே ஒரு உன்னதக் கோயில்,கட்டிடக் கலையை வெளிக்காட்டிய பல்லவ மன்னன் காடவர்கோன் ராஜசிம்மன் கைலாசநாதர் ஆலயத்தை ஒவ்வொரு கணமும் தன் மேற்பார்வையிலேயே நடத்திக்கொண்டிருக்கிறான்..அவன் மனதுக்கு மிகவும் த்ருப்தியாக கோயில் அழகுற அமிந்து மிளிர்ந்தது, குடமுழுக்கு வைபவத்துக்கு நாள் குறித்தாதாயிற்று. மறுநாள் குடமுழுக்கு, வெகுநாட்கள் கழித்து அன்று மனத் த்ருப்தியுடன் கண்ணயர்ந்தான் மன்னன். அவன் கனவில் கையிலைநாதன் தோன்றி நாளை திருநின்ற ஊரில் என் பக்தன் ஒருவன் கட்டிய கோயில் குடமுழுக்கு விழா நடத்துகிறான்,நான் அங்கே செல்ல வேண்டும் .அதனால் நீ வேறு ஒரு நாள் குறித்தால் அந்த நன்நாளில் நான் வருகிறேன் என்று கூறி மறைந்தார். அதைக் கேட்டு திடுக்கிட்டு விழித்த மன்னன் குடமுழுக்கு பணியை நிறுத்த ஆணையிட்டுவிட்டு திருநின்ற ஊருக்கு கிளம்பினான், கோயிலைத் தேடி அலைந்து களைத்துப் போனான் மன்னன். எங்கும் கோயிலைக் காணவில்லை. ஒரு விவசாயி இங்கே பூசலார் என்றொருவர் கோயில் கட்டவேண்டும் என்று கூறிக்கொண்டிருந்தார், இலுப்பை மரத்தடியில் பித்துப் பிடித்தாற் போல ஒருவர் இருப்பார், அவர்தான் பூசலார், அவரைப் பார்த்தால் விவரம் தெரியும் என்று கூறவே தேடி அலைந்து பூசலாரைக் கண்டான் மன்னன். ஆலயம் எங்கே என்றான் மன்னன்? இதோ என் மனதுக்குள்ளே என்றார் பூசலார்.பொருள் இல்லாத காரணத்தால் என் மனதால் ,பக்தியை மூலதனமாக்கி மனதுக்குள்ளேயே ஆலயம் அமைத்திருக்கிறேன் என்றார் பூசலார்.அவருடைய பக்தியை வியந்து அவருடைய இருதயத்தில் கட்டிய கோயிலுக்கு பூசலாரின் விருப்பப்படி திருநின்ற ஊரிலேயே திரு நின்ற ஊர் பக்தவச்சலப் பெருமான் ஆலயத்தின் அருகிலேயே அங்கேயே ஒரு ஆலயம் எழுப்பி இருதயாலீஸ்வரர் ஆலயம் என்று பெயரிட்டு. பூசலார் குறித்த நாளிலேயே குடமுழுக்கு செய்வித்து அதன் பின்னர் காஞ்சிக்கு சென்று கையிலாய நாதர் கோயிலுக்கும் குடமுழுக்கு செய்தான்.  இந்த இருதயாலீஸ்வரர் கோயிலில் கருவறையில் ஈசனாரின் லிங்கத் திருமேனிக்கு அருகே பூசலாரும் காட்சி தருகிறார் என்பதே இருதயத்தால் கட்டிய ஆலையம் என்பதால் இருதய தொடர்பான நோய்கள் உள்ளவர்கள் இங்கே வந்து இறைவன் ஆவுடையாரையும் இறைவி மரகதாம்பாளையும், பூசலாரையும் வேண்டிக்கொண்டால் நோய் நீங்கும் என்பது ஐதீகம். ஆவுடையார் லிங்கம் சதுர வடிவத்திலும், மரகதாம்பாள் நின்ற திருக்கோலத்திலும், நான்கு கரங்களுடன் காட்சி அளிக்கிறார். இருதயாலீஸ்வரரின் விமானம் கஜப்ருஷ்ட விமானமாக தூங்கானை மாடம் வடிவில் அமைந்துள்ளது.சுற்றுப் ப்ராகாரத்தில் வினாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்ரமணியர், நந்திகேஸ்வரர், சண்டிகேஸ்வரர், நடராஜர், சன்னிதிகள் உள்ளன. சங்கு சக்கரம் தாங்கி மஹாவிஷ்ணு காட்சி அளிக்கிறார். இது மிகவும் சிறப்பான அமைப்பு ஆகும். அன்புடன் Parth.

1/01/2013

ஜென் கதைகள் ( Zen stories )

 



Download Free Wallpaper - Zen Buddhist Wallpapers White Dove
 
ஜென் குரு ஒருவர் தன சீடர்களுடன் ஒரு பாலைவனப் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.கடும் வெயில்.ஒரு மரம் கூட இல்லை.ஒதுங்குவதற்கு எங்கும் இடமில்லை.நீர்நிலை எதுவும் தென்படவில்லை.குடிக்க தண்ணீர் கூடக் கிடைக்காததால் சீடர்கள் அனைவரும் சோர்வடைந்தனர்.அதைப் பார்த்த குரு மாலை நேரம் ஆகிவிட்டதால் ஒரு இடத்தில் தங்கலாம் என்று சொன்னார்.உடனே சீடர்கள் அனைவரும் சுருண்டு படுத்து விட்டனர்.குரு,உறங்கச் செல்லும் முன் தியானம் செய்வது வழக்கம்.அன்றும் அவர் மண்டியிட்டபடியே,''இறைவா,தாங்கள் இன்று எமக்களித்த அனைத்திற்கும் நன்றி.''என்று கூறி வணங்கினார்.பசியில் இருந்த ஒரு சீடனுக்கு உடனே கடுமையான கோபம் வந்தது.எழுந்து உட்கார்ந்த அவன்,''குருவே இன்று இறைவன் நமக்கு ஒன்றுமே அளிக்கவில்லையே?'' என்றான்.சிரித்துக்கொண்டே குரு சொன்னார்,''யார் அப்படி சொன்னது?இறைவன் இன்று நமக்கு அருமையான பசியைக் கொடுத்தார்.அற்புதமான தாகத்தைக் கொடுத்தார்.அதற்காகத்தான் அவருக்கு நன்றி செலுத்தினேன்.''இன்பமு துன்பமும் வாழ்க்கை என்னும் நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதை ஞானிகள் உணர்ந்திருக்கின்றனர்.


*******************************************************************************

The Burden

Two monks were returning to the monastery in the evening. It had rained and there were puddles of water on the road sides. At one place a beautiful young woman was standing unable to walk accross because of a puddle of water. The elder of the two monks went up to a her lifted her and left her on the other side of the road, and continued his way to the monastery.
In the evening the younger monk came to the elder monk and said, “Sir, as monks, we cannot touch a woman ?”
The elder monk answered “yes, brother”.
Then the younger monk asks again, “but then Sir, how is that you lifted that woman on the roadside ?”
The elder monk smiled at him and told him ” I left her on the other side of the road, but you are still carrying her.”

-Partha.
 

12/28/2012

சென் கதை ( Zen stories )

 

சென் கதை

புத்தர் பெருமான் மரத்தடி நிழலில் அமர்ந்திருந்தார்.
சுற்றிலும் சீடர்கள், அவருடைய அருளுரையைக் கேட்க ஆவலுடன் காத்திருந்தார்கள்.

புத்தர் தம் சீடர்களை நோக்கி “ஒரு மனிதனின் வாழ்நாள் எவ்வளவு காலம் என்று கேட்டார்.
எதற்கு அவர் இப்படியொரு சாதராணக் கேள்வியைக் கேட்டார் என்பது விளங்காமல் சீடர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.
“எழுபது ஆண்டுகள்“ என்றார் ஒரு சீடர்.
“தவறு“ என்றார் புத்தர்
“அறுபது ஆண்டுகள்“ என்றார் ஒரு சீடர்.
“தவறு“ என்றார் புத்தர்
“ஐம்பது ஆண்டுகள்“ என்றார் ஒரு சீடர்
“தவறு“ என்றார் புத்தர்.

இதென்ன எல்லாவற்றையும் தவறு என்கிறாரே! மனித வாழ்வு ஐம்பது ஆண்டுகள் கூட இல்லையா என்ன என்று திகைத்தார்கள் சீடர்கள்.

சில வினாடிகள் அமைதியாக இருந்தார் புத்தர்.

பிறகு அவர் “அது ஒரு மூச்சு“ என்றார்!

“வெறும் மூச்சுவிடும் நேரம்தானா?” என்று கேட்டார் ஒரு சீடர்.
அப்படியல்ல.
வாழ்வு ஒரு கணமன்று.!
ஆனால் ஒவ்வொரு கணமாக வாழவேண்டும்.!
ஒவ்வொரு கணப்பொழுதிலும் முழுமையாக வாழவேண்டும்.!
கணம் கணமாக வாழவேண்டும்! என்றார் புத்தர்.


சிலர் நேற்றில் வாழ்கிறார்கள். நேற்றைய நினைவில் மூழ்கி இறந்தகாலத்தில் வாழ்கிறார்கள்.
சிலர் அறியப்படாத எதிர்காலத்தில், எதிர்காலக் கனவில், எதிர்கால ஏக்கத்தில் ஒரு தெளிவில்லாமல் வாழ்கிறார்கள்.
அவர்கள் நிகழ்காலத்தை இழந்துவிடுகிறார்கள்.
எதார்த்தமான நம் முன்னால் துடித்துக்கொண்டுள்ள நம் கைவசமுள்ள நம் ஆளுகைக்கு உட்பட்ட நம் அதிகாரத்தில் உள்ள நிகழ்காலத்தைக் காணச் சக்தியற்ற அந்தகர்களாக (கண்பார்வையற்றவர்களாக) இருக்கிறார்கள்.


கணத்திற்குக் கணம், நிகழ்காலத்தில் முழு ஈடுபாட்டோடு வாழ வேண்டும் என்பது சென் தத்துவம்.
                 
************************************************************
A Cup of Tea ( Zen)
Nan-in, a Japanese master during the Meiji era (1868-1912), received a university professor who came to inquire about Zen.
Nan-in served tea. He poured his visitor’s cup full, and then kept on pouring.
The professor watched the overflow until he no longer could restrain himself. “It is overfull. No more will go in!”
“Like this cup,” Nan-in said, “you are full of your own opinions and speculations. How can I show you Zen unless you first empty your cup?”

-Partha.
Source, Myrko Thum.

 

12/23/2012

ஸ்ரீ ராகவேந்திர சுவாமி ( SRI RAGHAVENDRA SWAMY )


ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள்
 
Sri Raghavendra Swamy


பூஜ்யாய ராகவேந்த்ராய சத்ய தர்ம ரதாயச |
பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேனவே ||


வெங்கடநாதர் திரு திம்மண்ண பட்டர் மற்றும் திருமதி கோபிகாம்பாள் என்ற தம்பதிகளுக்கு பெருமாள் வெங்கடாஜலபதியின் அருளால் மூன்றாவதாக ஒரு பிள்ளை தமிழ் நாட்டில் சிதம்பரத்தை அடுத்த புவனகிரியில் பிறந்தது. அவர்கள் அந்த குழந்தைக்கு வெங்கடநாதன் என்று பெயரிட்டனர்.
வெங்கடநாதர் மிகச்சிறு வயதிலிருந்தே நல்ல அறிவாற்றலுடன் திகழ்ந்தார். அவரது தந்தையின் மறைவிற்கு பிறகு அவர் தன் அண்ணன் திரு குருராஜ பட்டரிடம் வளர்ந்தார். அவரது அடிப்படைக் கல்வியை அவர் மைத்துணர் திரு லக்ஷ்மீ நரசிம்ஹாசாரியாரிடம் மதுரையில் பயின்றார். அவர் மதுரையிலிருந்து திரும்பியவுடன் வெங்கடனாதர் சரஸ்வதி என்பவரை மணந்தார். அவரது திருமணத்திற்கு பிறகு அவர் கும்பகோணத்திற்க்கு குடியேறினார். அங்கே அவர் ஸ்ரீ சுதீந்திர தீர்த்தரிடம் துவைத வேதாந்தத்தையும் இலக்கியத்தையும் பயின்றார். சொற்பொழிவு ஆற்றுவதில் சிறந்தவரான அவர் பல அறிஞர்களுடன் விவாதங்களின் ஈடுபட்டு வெற்றியும் கண்டார். அவர் இசையில் நல்ல தேர்ச்சி பெற்றவராகவும் வீணை வாசிப்பதில் சிறந்தவராகவும் திகழ்ந்தார். அவர் குழந்தைகளுக்கு சமஸ்கிருதமும் வேதமும் கற்பித்தார். அதற்கு அவர் தன் மாணவர்களிடம் எந்த பணமும் எதிர்ப்பர்ப்பார்க்காததால் வறுமையில் வாழ்ந்தார். இதனால் அவரும் அவர் குடும்பமும் வாரத்தில் பல நாட்கள் பட்டினியாக இருந்தனர். இவ்வாறு வறுமையில் வாடியும் அவர் கடவுள் மேல் மிக்க நம்பிக்கையுடன் இருந்தார்.
வெங்கடநாதருக்கு மனதிற்குள்ளே ஸ்தோத்திரம் சொல்லும் பழக்கம் இருந்தது. ஒரு முறை அவர் கும்பகோணத்தில் ஒரு நிகழ்ச்சிக்காக குடும்பத்தோடு அழைக்கபட்டார். அழைத்தவர் வெங்கடநாதரை சரியாக நடத்தவில்லை. அவர் தான் வழங்கும் விருந்திற்க்கு ஏதேனும் வேலை வாங்க வேண்டும் என்று வெங்கடநாதரை சந்தனம் அறைத்துதரச் சொன்னார். அந்த சந்தனம் மற்ற விருந்தினர்க்கு உடம்பில் பூசிக்கொள்ள கொடுக்கப்பட்டது. அவ்வாறு பூசிக்கொண்ட விருந்தினர்க்கு உடல் முழுக்க எரிச்சல் ஏற்பட்டது. வியப்படைந்த அழைத்தவர், வெங்கடநாதரை கேட்டபோது அவர் சந்தனம் ஆரைக்கும்போது 'அக்னி சுக்தம்' என்ற ஸ்தோத்திரத்தை ஜபித்ததாகவும் அதன் காரணமாகவே அந்த எரிச்சல் ஏற்பத்டததாகவும் கூறினார். இவ்வாறு கூறிய வெங்கடநாதர் வருண மந்திரத்தை ஜபித்து விருந்திற்க்கு வந்தவர்களின் எரிச்சலை போக்கினார். அதன் பிறகு, அழைத்தவர் தான் தவரை உணர்ந்து அவரை மன்னிக்கும்படி கேட்டுக்கொண்டு நல்ல முறையில் கவுரவித்தும் அனுப்பினார்.
துறவறம் ஏற்ற குரு ராகவேந்திரர்
வெங்கடநாதரின் குருவான ஸ்ரீ ஸுதீந்திர தீர்த்தார் தனக்கடுத்து மத்வ மடத்திற்க்கு பீடாதிபதியாக ஒரு நல்ல வாரிசை தேடிக்கொண்டிருந்தார். அப்பொழுது அவர் தான் பகவான் வெந்கடநாதரே ஸுதீந்திரர்க்கு பின் மடத்த்தின் பீடாதிபதியாக ஏற்றவர் என்று கூறியதாக கனவு கண்டார். ஸுதீந்திரரும் அவர் விருப்பத்தை வெங்கடநாதரிடம் தெரிவித்தார். வெங்கடநாதர் அவர் மனைவியும் இளைய மகனையும் காப்பாற்ற வேண்டி இருந்ததால் அவரால் அப்பொறுப்பை ஏற்க இயலவில்லை. எனவே அவர் குருவின் விருப்பத்தைக் கேட்டு மிகவும் மனமொடிந்துப் போனார். எனினும் கடவுளின் இச்சையினாலும் கலைவாணியின் அருளாலும் பிறகு தனது முடிவை மாற்றிக்கொண்டார்.
வெங்கடநாதர், தஞ்சாவூரில் 1621 ஆம் ஆண்டு பால்குண மாசம், சுக்கில பக்ஷம், துவிதியை அன்று துறவரம் ஏற்று ஸுதீந்திர மடத்தின் பீடாதிபதியாக ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தராக பொறுப்பேற்றார்.

 அதிசயங்களும் அற்புதங்களும்

பீடத்தை ஏற்ற பிறகு அவர் பல்வேறு யாத்திரைகளை மேற்க்கொண்டார். அவர் சென்ற இடமெல்லாம் ஸ்ரீமத் ஆச்சாரியாரின் சித்தாந்தத்தைய் பரப்புதல், மற்ற எதிர் சித்தாந்தங்களை ஆதரிக்கும் அறிஞர்களை விவாதத்தில் வெல்லுதல், குறிப்புகளை எழுதுதல், மாணவர்களுக்கு சாஸ்திரங்களை போதித்தல் மற்றும் உள்ளூர் அரிஞ்யர்களை ஊக்குவித்தல் பொன்ற காரியங்களில் ஈடுபட்டார். அவர் சென்ற இடமெல்லாம் தன் பக்தர்களின் குறைகளையும் உடல் ஊனங்களையும் குணமடையச் செய்து அருளினார்.

ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ!  ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ! ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ!

Thanks :- Wikipedia.
Partha.

12/15/2012

தியானம் (Power of Meditation)

 

 தியானம்
 
நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் சிறிதளவேனும் தியானம் செய்துகொண்டுதான் இருக்கிறோம். அது நம் மனத்தின் இயல்புகளில் ஒன்று. தியானம் என்று நாம் இன்று சொல்லி வருவது அந்த இயல்பானசெயல்பாட்டை இன்னும் விரிவாக, திட்டமிட்ட முறையில், முறையான பயிற்சியுடன் அமைத்துக் கொள்வதைத்தான்.
நம் மனம் நம்முள் எப்போதும் இருந்துகொண்டே இருக்கிரது. மனம் என்றால் என்ன என்றால் அதற்கு நமக்குள் ஓடு எண்ணங்களின் அறுபடாத நீட்சி என்று பதில் சொல்லலாம். மூளையின் நியூரான்களுக்கு இடையே நிகழ்ந்துகொண்டிருக்கும் தொடர்பாடலின் விளைவு இது என்று நரம்பியலாளர்கள் பதில் சொல்லக்கூடும்.
அந்த செயல்பாட்டை நாம் கூர்ந்து கவனித்தால் பிளாட்டிங் பேப்பரில் மை மரவுவது போல மிக இயல்பாக அது தன் விளிம்புகளில் இருந்து விரிந்து விரிந்து பரவிக்கொண்டே இருப்பதைக் காணலாம். அதற்கு இலட்சியம் இல்லை. அமைப்பு இல்லை. மையம் இல்லை. அதாவது நாமறிந்த எந்த ஒருங்கிணைவும் அதற்கு இல்லை. அது ஒரு தன்னிச்சையான பிரவாகம்.
இந்த மனச்செயல் நின்று, அது இல்லமலாகிவிடுவதைப்போன்ற ஒரு தருணம் நமக்கெல்லாம் ஏற்படுவது உண்டு. ஒரு புத்தம்புதிய அனுபவத்தை நாம் அறியும்போது நாம் சிலகணம் மனமிலாதவர்கள் ஆகிறோம். உடனே நாம் அப்படி இருந்ததை நாம் உணரும்போது அந்த நிலை கலைந்து மனம் செயல்பட ஆரம்பித்துவிடுகிறது. ஓர் இயற்கைக் காட்சியைக் காணும்போது சிலகணங்கள் அப்படி ஆகிவிடுகிரது. நல்ல இசை பலகணங்கள் அப்படி நம்மை ஆக்கிவிடுகிறது.
உள்ளதே உண்மை. அதுவே உடல். இந்த நோக்கில் உடலே உண்மை. உள்ளம் என்னும் சொல் அதிலிருந்து வந்தது. உள்ளே இருப்பது உள்ளம். அங்கே நிகழ்வது உள்ளுதல் அல்லது நினைத்தல். அதாவது மனித இருப்பு என்பது உள்ளமும் உடலும் சேர்ந்த ஒரு நிலை. அந்த நிலையை முற்றாக மறந்த நிலையையே நாம் மெய்மறத்தல் என்கிறோம். உள்ளுதலும், உண்மையும் இல்லாமலாகும் கணம்.
அந்தச்செயலே இயல்பான தியானமாகும். நாம் ஒரு ஆழமான அனுபவத்தை அடையும்போது மெய்மறந்த நிலையில் இருக்கிறோம். அப்போது நமக்குக் கிடைக்கும் எந்த அறிவும் நம் நினைவிலிருந்து மறைவதே இல்லை. நம்முடைய சிறந்த ஞானம் முழுக்க முழுக்க அந்த மெய்மறந்த தருணங்களில் நாம் அடைந்தனவாகவே இருக்கும். சொல்லப்போனால் கலையில் இலக்கியத்தில் பயணத்தில் நாம் தேடிக்கொண்டிருப்பதெல்லாம் மெய்மறக்கும் அந்த அனுபவத்தை மட்டுமே.
அந்த மெய்மறக்கும் தருணத்தில் என்ன நடக்கிறது? ஓயாது ஓடிக்கொண்டிருக்கும் நம் மனம் இல்லாமலாகிவிடுகிறது. ஒரு திரைபோல அது விலகிவிடுகிறது. அதற்கப்பாலுள்ள இன்னொரு ஆழம் திறந்துகொள்கிறது. அந்தக் கணத்தின் அனுபவத்தை அறிவது அந்த ஆழம்தான்.
ஓயாது நம்முள் ஓடும் மேல்மனதை– நாம் எப்போதும் அறியும் மனத்தை- ஜாக்ரத் என்றது நம் மரபு [விழிப்புமனம்] அதற்கப்பால் உள்ள மயக்கநிலைகொண்ட ஆழத்தை ஸ்வப்னம் [கனவுமனம்] என்றது. ஸ்வப்னம் என்பது ஒரு சுரங்கவழிப்பாதை. ஓர் ஊடகம் அது. அதன் வழியாக நாம் போவது மேலும் ஆழ்மான ஒரு பூரண மனத்தை. தன்னுள் தான் நிறைவுகொண்டு இயங்கும் ஆழம் அது. அதை சுஷ¤ப்தி [முழுநிலைமனம்] என்றது மரபு.
ஜாக்ரத்,ஸ்வப்னம்,சுஷ¤ப்தி என்ற மூன்றையும் துமி, நுரை, அலை என்று வைத்துக்கொண்டால் கடல்தான் துரியம் எனப்பட்டது. அதாவது கடல்தான் இருக்கிறது. அதைத்தான் நாம் பலவாக பார்க்கிறோம். துரியம் என் மனமோ உங்கள் மனமோ அல்ல. அது முழுமனம். மானுடத்துக்கு பொதுவான மனம். காலங்கள்தோறும் நீடிக்கும் மனம். பிரபஞ்ச மனம். அந்த மனத்தின் தோற்றங்களே மற்ற மூன்றும்.
ஆகவே, நாம் நம் ‘மெய்மறந்த’ நிலையில் அடையும் அனுபவமென்பது நம் ஜாக்ரத் விலகி நிற்கும் ஸ்வப்ன நிலையே. அது மேலும் தீவிரமாக இருந்தால் ஸ்வப்னமும் விலகி சுஷ¤ப்தி நிலையை கொண்டிருக்கிறது. அது அதி உக்கிரமானதாக இருந்தால் அது துரிய நிலையை அடைந்துவிடுகிறது
நாராயணகுரு துரியநிலையை ‘அறிபவன், அறிவு, அறிபொருள்’ ஆகிய மூன்றும் ஒன்றாகி நிற்கும் நிலை என்று தன் அறிவு என்னும் நூலில் சொல்கிறார். பேதமில்லாத அந்த நிலையையே அத்வைதம் இரண்டின்மை என்று சொல்கிறது. சிறிய அளவிலேனும் இந்த இரண்டற்ற நிலையை சில கணங்கள் அனுபவிக்காத மனிதர்களே பூமியில் இருக்க மாட்டார்கள்.
அந்த நிலையை பயிற்சியின்மூலம் அடைய முடியுமா என்பதே தியான மரபின் நோக்கமாகும். இந்திய ஞானமரபில் தொல்பழங்காலம்முதலே அதற்கான பயிற்சிகள் ஆரம்பித்து விட்டன. இதை யோகம் என்றார்கள். யோகம் என்றால் இணைதல் என்று பொருள். அறிபடுபொருளும் அறிபவனும் இணையும் நிலையை அப்படிச் சொன்னார்கள். தியானம் என்பது யோகத்தின் முதல்படி.
இந்திய மரபில் உள்ள எல்லா ஞானமுறைகளுக்கும் யோகம் பொதுவானது. என்றாலும் பௌத்தமரபிலேயே அதற்கு முதல்முக்கியத்துவம் . அதற்கடுத்தபடியாக சமணத்தில். பின்புதான் இந்து ஞான மரபுகளில்.
தொல்தமிழில் தியானம் ஊழ்கம் எனப்பட்டது. ஆழ்தல் என்னும் சொல்லுக்கு ஊழ்தல் என்னும் ஒலிமாறுபாடும் உண்டு . ஊழ்கம் அதிலிருந்து வந்தது. ஊழ்கம் செய்பவர்கள் ரிஷிகள் என்று சம்ஸ்கிருதத்திலும் படிவர் என்று தமிழிலும் சொல்லப்பட்டார்கள்.
பதஞ்சலி யோக சூத்திரமே இந்திய ஞானமரபின் முதன்மையான யோக நூலாகும். அதற்கு ஒரு உரை எழுத ஆரம்பித்தேன். இந்த இணையதளத்தில் இரு அத்தியாயங்கள் வெளியாகின. முடிக்கவேண்டும்.
தியானம் என்றால் எதுவெல்லாம் அல்ல என்று இப்போது தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டியிருக்கிறது. ஒன்று, வேண்டுதல் அதாவது பிரார்த்தனை என்பது தியானம் அல்ல. சமீபகாலமாக கிறித்தவ மத நிகழ்ச்சிகளில் அப்படிச் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். லௌகீகமாகவோ அல்லது வேறுவகையிலோ நமக்குத்தேவையானவற்றை ஒரு சக்தியிடம் மன்றாடிக் கேட்டுக்கொள்வதற்குத்தான் வேண்டுதல் என்று பெயர். அது ஒருபோதும் தியானம் அல்ல.
தியானத்துக்கு ஒரு கடவுள் தேவை இல்லை. முன்னிலைச்சக்தி ஒறு தேவை இல்லை. தியானம் ஒருநிலையிலும் உலகியல் லாபங்களுக்கான அல்லது சொற்கத்துக்குப் போவதற்கான ஒரு வழிமுறை அல்ல. அது ஆழமான அறிதல் நிலை முழுமையான இருத்தல்நிலை ஒன்றை அடைவதற்கான யத்தனம் மட்டுமே.
வழிபாடுகள், தொழுகைகள், கூட்டுப்பிரார்த்தனைகள் ஆகியவற்றுக்கும் தியானத்துக்கும் முழுமையான வேறுபாடு உண்டு. இவை செயல்படும்தளமே வேறு. தியானம் கடவுள் சார்ந்தது அல்ல. தியானத்தில் தியானிப்பவன் மட்டுமே இருக்கிறான், அவனைச்சுற்றி அவன் அறியும் பிரபஞ்சம் இருக்கிறது. ஆகவே நாத்திகர்களுக்கும் ஆத்திகர்களுக்கும் எல்லாம் உரிய ஒரு வழிமுறை அது.
யோகத்தை நமக்கு ஒருவர் கற்றுத்தரவேண்டுமா என்றால் வேண்டியதில்லை என்றே சொல்லலாம். நம் மனதை நாம் கவனித்து அதன் இயல்புகளை உணர்ந்து மெல்ல மெல்ல ஒழுங்குபடுத்துவதற்கு புற உதவி தேவையே இல்லை. ஆனால் நடைமுறையில் தேர்ந்த உதவி இல்லாவிட்டால் பலவகையான வழிதவறுதல்கள் ஏற்பட்டு சக்திவிரயம் ஏற்படும்.
உதாரணமாக தியானத்தில் அமரும் ஒருவர் தன் மன ஓட்டத்தை தொகுத்துக்கொள்ள ஓர் ஒலியை — அதாவது தியானமந்திரத்தை — பயன்படுத்துவது வழக்கம். அவர் அதை தன் மூச்சுக்காற்றின் தாளத்துடன் இணைத்துக்கொண்டாரென்றால் அந்த ஒருமுகப்படுத்தல் இயல்பாக நிகழும். தியானம் நன்றாக நிகழ்வது போலவும் இருக்கும். பலவருடங்கள் இந்த மாயை நீடிக்கும். பின்னர் தெரியும் அவர் மனதை ஒருமுகப்படுத்தவில்லை, மூச்சுக்காற்றுக்கு ஒரு ஒலியை அளித்திருக்கிறார் என. மந்திரத்தை மூச்சுடன் இணைக்கக் கூடாது என்பது ஓர் அனுபவப் பாடம்.
அத்தகைய அனுபவ பாடங்களை நமக்கு அளிப்பவரே குரு. குரு இல்லாமல் தியானக்கல்வியை முழுமையாக அடைய முடியாதென்றே நினைக்கிறேன். ஞானிகளுக்கு அது ஒரு பொருட்டு அல்ல. குரு என்பவர் நம்மைந் அன்கறிந்த, நம் அந்தரங்கத்துக்குள் எளிதாக வரும் வல்லமைகொண்ட, நம் மீது அளவில்லாத பிரியம் கொண்ட ஒரு மனிதர். அவரது வழிகாட்டல்கள் நம்மைக் கொண்டுசெல்லும் அளவுக்கு நூல்கள் கொண்டுசெல்லாது என்பதே என் அனுபவம்.
இப்போது பல்வேறு யோக அமைப்புகள் யோகமுறைகளை கற்றுக்கொடுக்கின்றன. ஆரம்பநிலையில் அவை உதவிகரமானவை. அங்கே ஆரம்பவிதிகளும் அவற்றை பயிற்றுவிக்கும் வழிகாட்டுநர்களும் அங்கே உள்ளனர். அவர்கள் நம்மை ஓர் எல்லைவரை வழிகாட்டக்கூடும்– எனக்கு அவர்களிடம் அனுபவம் இல்லை. ஆனால் ஒரு தனிப்பட்ட குருவே அடுத்த கட்டங்களுக்குக் கொண்டுசெல்லமுடியும்.
மிக எளிய அடிப்படையில் ஆனாலும்கூட தியானம் மன அமைதிக்கும் சமநிலைக்கும் மிக மிக உதவிகரமானதுதான். ஆகவே எங்கே எப்படி தியானம் செய்தாலும் அது நல்லதுதான். ‘சரியான’ தியானமென்று ஒன்று இல்லை. ‘சரியான தியானத்தைச் செய்பவரே’ இருக்கிறார். தியானத்தை தொடர்ச்சியாக, விடாப்பிடியாக, கூர்ந்த அவதானத்துடன் செய்வதே முக்கியமானது.
தியானத்தின் வழிமுறையை மிக எளிமையாக இவ்வாறு விளக்கலாம். மனதைக் குவியச்செய்தல், மனதை அவதானித்தல், மனதை கரையவைத்தல் என்னும் மூன்றுபடிகள்
முதல்படி, மனதைக் குவியச்செய்ய முயல்வது. இது பிரிந்து பரவும் மனதின் இயல்புக்கு நேர் எதிரானது. இதன்மூலம் நாம் மனதின் கட்டற்ற இயக்கத்தை மெல்ல மெல்ல கட்டுக்குள் கொண்டுவருகிறோம். இதற்கான வழிகள் பல. ஓர் ஒலியில் மனதை குவியச்செய்யலாம். இதற்கு மந்திரம் என்னும் பொருளில்லாத ஒலி [ஓம், ரீம் போல] உதவுகிறது. அல்லது ஒரு பிம்பத்தில் பார்வையைக் குவிக்கலாம். அல்லது இரண்டையும் செய்யலாம்.
மனதைக் குவித்தல் மிகமிக கடுமையான செயல். மனம் என்னென்ன மாயங்கள் காட்டும் என நாம் அப்போது அறிவோம். நாம் மனதைக் குவியச்செய்ய முயன்றால் மனதைக்குவியச்செய்யும் செயலைப்பற்றிய எண்ணங்களாக நம் மனம் ஆகிவிடும். எதைப்பற்றி எண்ணக்கூடாதென நினைக்கிறோமோ அந்த எண்ணங்களே அதிகமாக எழும். கூடவே அதை அடக்கும் எண்ணங்களும் அதே எண்ணிக்கையில் எழும்.
இவ்வாறு மனதைக் குவிக்க முனைகையில் தவிர்க்க முடியாமல் நாம் நம் மனதை கவனிக்க ஆரம்பிக்கிறோம். நம் மனம் எப்படி இயங்குகிறது என்பதைக் காணும்போது அதை மெல்ல மெல்ல புரிந்துகொள்கிறோம். நீங்கள் தியானத்தில் இருக்கும்போதுதான் நீங்கள் எத்தனைபெரிய சுயமையவாதி என்று தெரியும். நீங்கள் உங்களையே எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள் என்பது புரியும். உங்கள் அற்ப பாவனைகள் அற்ப ஆசைகள் சிறுமைகள் எல்லாமே தெரியும்.
அந்த அறிதல் மூலம் அவற்றை நீங்கள் தாண்ட முடியுமென்றால்தான் தியானம் கைகூடுகிறது என்று சொல்லமுடியும். தியானம் மெல்லமெல்ல பல காலமாக உங்களில் நிகழ்ந்து ஒரு கட்டத்தில் நீங்கள் சில கணங்கள் மனமிலா நிலையை அடையமுடியும். அப்போது ஒரு கணத்தில் நீங்கள் அறிவதை எத்தனை படித்தாலும் விவாதித்தாலும் அறிய முடியாதென அறிவீர்கள். அதுவே தியானம்.
 
What meditation exactly means. ( Sri Aurobindo)  There are two words used in English to express the Indian idea of dhyАna, "meditation" and "contemplation". Meditation means properly the concentration of the mind on a single train of ideas which work out a single subject. Contemplation means regarding mentally a single object, image, idea so that the knowledge about the object, image or idea may arise naturally in the mind by force of the concentration. Both these things are forms of dhyАna, for the principle of dhyАna is mental concentration whether in thought, vision or knowledge.
There are other forms of dhyАna. There is a passage in which Vivekananda advises you to stand back from your thoughts, let them occur in your mind as they will and simply observe them and see what they are. This may be called concentration in self-observation.
This form leads to another, the emptying of all thought out of the mind so as to leave it a sort of pure vigilant blank on which the divine knowledge may come and imprint itself, undisturbed by the inferior thoughts of the ordinary human mind and with the clearness of a writing in white chalk on a blackboard. You will find that the Gita speaks of this rejection of all mental thought as one of the methods of yoga and even the method it seems to prefer. This may be called the dhyАna of liberation, as it frees the mind from slavery to the mechanical process of thinking and allows it to think or not to think, as it pleases and when it pleases, or to choose its own thoughts or else to go beyond thought to the pure perception of Truth called in our philosophy VijЬАna.
Meditation is the easiest process for the human mind, but the narrowest in its results; contemplation more difficult, but
greater; self-observation and liberation from the chains of Thought the most difficult of all, but the widest and greatest in its fruits. One can choose any of them according to one's bent and capacity. The perfect method is to use them all, each in its own place and for its own object; but this would need a fixed faith and firm patience and a great energy of Will in the self-application to the yoga.
- Partha.