1/03/2012

ஜென் தத்துவங்கள்

கோபத்தைக் களைவது எப்படி?
லின் சீ (Lin Chi) என்ற பிரபல ஜென் துறவிக்குச் சிறு வயதில் இருந்தே படகில் பிரயாணம் செய்வதில் மிகுந்த ஈடுபாடு. அவரிடம் ஒரு சிறு படகு இருந்தது. அருகில் இருந்த ஏரிக்குச் சென்று அந்தப் படகில் மணிக்கணக்கில் இருப்பார். பல சமயங்களில் கண்களை மூடித் தியானம் செய்வது கூட படகில் இருந்தபடி தான்.

ஒரு நாள் அவர் படகில் தியானம் செய்து கொண்டு இருந்த போது காலியான வேறொரு படகு காற்றின் போக்கில் மிதந்து வந்து அவரது படகை இடித்தது.

தியானத்தில் இருந்த அவருக்கு மிகுந்த கோபம் ஏற்பட்டது. யாரோ அஜாக்கிரதையாக படகை ஓட்டிக் கொண்டு வந்து தம் படகில் மோதி விட்டதாக எண்ணி கண்களைத் திறந்து திட்ட முற்பட்டார். பார்த்தால் காலிப் படகு ஒன்று தான் அவர் முன்னால் இருந்தது.

"என் கோபத்தை அந்தக் காலிப் படகின் மீது காட்டிப் பயன் இல்லை. மௌனமாகத் தான் நான் ஞானம் பெற்றேன். அந்தப் படகு எனக்கு குருவாக இருந்தது. இப்போதெல்லாம் யாராவது வந்து என்னை அவமானப்படுத்தவோ, மனதைப் புண்படுத்தவோ முற்பட்டால் புன்னகையுடன் "இந்தப் படகும் காலியாகத் தான் இருக்கிறது" என்று எனக்குள் கூறி கொண்டு அமைதியாக நகர்வது எனக்குச் சுலபமாகி விட்டது" என்று அவர் பிற்காலத்தில் எப்போதும் கூறுவார்.

ஜென் தத்துவங்கள் ரத்தினச் சுருக்கமானவை; கருத்தாழம் மிக்கவை. இந்தக் காலிப் படகின் பாடமும் நன்றாகச் சிந்தித்தால் நமக்கு விளங்கும்.
-Partha.

ஜென் தத்துவம் - ஓர் எளிய அறிமுகம்.

ஜென் எனபது ஒரு மதமல்ல. அதில் சடங்குகளோ, வழிபாடுகளோ ஏதுமில்லை. கடினமான தத்துவ விளக்கங்கள் ஏதும் ஜென்னில் கிடையாது. இதுதான் இறைவன் என்றோ இதுதான் இறைவனை அடையும் வழிஎன்றோ ஜென் குறிப்படுவதில்லை. பொதுவாக புத்தமத கருத்துகளை ஜென் என நினைப்பார் உண்டு. ஆனால் அப்படியல்ல. ஜென் தத்துவங்களில் புத்தரும் ஒரு ஜென் துறவியாக வருகிறார். ஜென் தத்துவத்தின் சாராம்சம் இதுதான் : " நீ நீயாக இரு.......இயல்பாக இரு...... அந்தந்த கணங்களில் உணர்ந்து வாழு.....கடந்தகாலத்தையும் எதிர்காலத்தையும் நினைத்து வருந்துவதில் எந்தப் பயனும் இல்லை. யாருக்கும் கெடுதல் செய்யாதே, நினைக்காதே.....எளிமையாக இரு. நான் என்ற முனைப்பை விட்டு உலக காரியங்களை செய்து வா. இயல்பாக, அமைதியாக, நிதானமாக இருப்பதே இறையுணர்வு. இதற்கென தனியாக இறைவனை துதிபாடுவது கூட வீண்வேலை. எதிர்பார்ப்பின்றி காரியங்களை ஆற்றி வா. எதிர்பாராமல் இருப்பதால் நடப்பது நடக்காமல் போகாது - இவைகளே ஜென் தத்துவத்தின் அடிப்படை கோட்பாடுகளாகும். உள்ளுணர்வால் வழிகாட்டப்பட்டு அது எதை செய்ய சொல்கிறதோ அதை இயல்பாக செய் என்கிறது ஜென். ஜென் துறவிகள் என்பவர்கள் எதையும் குறிப்பாக போதனை செய்ய மாட்டார்கள். சிறுசிறு கதைகள் மூலமாக, தங்களின் செயல்களின் மூலமாக - மிகப்பெரிய வாழ்க்கை ரகசியங்களை, பிரபஞ்ச ரகசியங்களை விளங்க வைத்துவிடுவார்கள். ஜென் கதைகளை படித்தால் மனம் மிக லேசாகிவிடும். வாழ்க்கையின் சலிப்பான தருணங்களில், கஷ்டமான நேரங்களில் ஜென் கதைகள் மிகுந்த ஆறுதல் அளிப்பவையாகும். அமைதி, எளிமை, உண்மை, நேர்மை இவையே ஜென்ன்னின் சிறப்பு அம்சங்களாகும்.
 
ஒரு சிறிய ஜென் தத்துவத்துடன் இக்குறுங்கட்டுரையை முடிக்கிறேன்.
 
பசித்தால் சாப்பிடு...
தூக்கம் வந்தால் தூங்கு....
 
- Partha.

ஜென் தத்துவங்கள். . .

காலம்யாருக்காகவும், யாரும் காத்திருப்பதில்லை. எவருக்காகவும், காலம் நின்று விடுவதில்லை.

மதம்
மனிதனுக்காகத்தான் மதமே தவிர, மதத்திற்காக மனிதன் இல்லை. மனிதத் தன்மை மறந்த மதம் வெறும் யானையின் மதமே.

இயல்பாக இரு
விரும்பியது அமையாவிடில் அமைந்ததை விரும்பு. தேவை கடலளவு, கிடைப்பது கையளவா? கையையே கடலாக நினைத்துக் கொள்.

தேடுதல்
கண்கள் குருடாகலாம். ஆனால் கருத்து குருடாகக் கூடாது. உள்ளிருப்பதுதான் வெளியிலும், என்பதை உணர்ந்து கொண்டால் போதும்.

தன்னைப் போல் பிறரையும் நேசி.

எதனால் அளக்கிறோமோ அதனால் தான் நாமும் அளக்கப் படுகிறோம்.

இரவல் அறிவு
கட்டிக் கொடுத்த உணவும், சொல்லிக் கொடுத்த சொல்லும் நெடுந்தொலைவு வராது.

ஞானம்
அறிவுக்கோ , விவாதங்களுக்கோ எட்டாதது ஞானம். தெரியாததைத் தெரியாது என்று ஒப்புக்கொள். தெரிந்ததாக வேடம் போடாதே.

சகிப்புத் தன்மையே ஞானத்தின் திறவுகோல். சகிப்புத் தன்மை இல்லாத ஞானம் வெறும் அறிவின் அகந்தை.

அறியாமைஅறியாமை அன்பு செலுத்தும். அறிவு ஆதிக்கம் செலுத்தும் .
பல இடங்களில் அறிவை விட அறியாமையே போற்றப்படுகிறது.
நான்'இறைவனுக்கு நான் ஒரு பெரிய கோயில் கட்டினேன்' என்னும் போது அங்கே 'நான்' என்பதே பிரம்மாண்டமாக நிற்கிறது.
மௌனம்மௌனம் தன்னை மௌனம் என்று எப்போதும் சொல்வதில்லை.
காலம்காலம் மட்டுமே எதனையும் தீர்மானிக்கும். தனி மனித விமர்சனங்கள் என்பது அவரவர் கண்ணோட்டமே.          
 -Partha.

1/02/2012

ஞானக் கதைகள் - புத்தர்

துறவி ஒருவரை ஒருவன் பார்க்க சென்றான்.அவரிடம் தன நீண்ட நாள் சந்தேகத்தைக் கேட்க அனுமதி கேட்டான்.அவரும் சம்மதிக்கவே அவன் கேட்டான்,''எப்போதும்நீங்கள்சிரித்தமுகத்துடனஇருக்கிறீர்கள்.கோபம் கொள்வதே இல்லை.நீங்கள் பொறாமைப்பட்டு யாரும் பார்த்ததில்லை.என் சந்தேகம் என்னவென்றால்,நீங்கள் நடிக்கிறீர்களா?உண்மையில் இப்படி இருக்க முடியுமா?''துறவி சொன்னார்,''அது இருக்கட்டும்.இப்போது உன் கைரேகையைப் பார்த்தேன்.இன்னும் ஏழு நாட்கள்தான் நீ உயிருடன் இருப்பாய்.ஏழாவது நாள் சூரியன் மறையும்போது நீ மரணமடைவாய்,''அவன் பதட்டத்துடன் உடனே அங்கிருந்து கிளம்பி விட்டான்.வீட்டில் போய் உடனே படுத்துக் கொண்டான்.குடும்பத்தார் என்னவென்று விசாரிக்க நடந்ததை சொன்னான்.எல்லோரும் அழ ஆரம்பித்தனர்.சாவு நெருங்கிக் கொண்டிருந்தது.எதுவும் இனி செய்ய முடியாது என்ற தெளிவான முடிவுக்கு அவன் வந்ததும்,அவனுக்குள் ஒரு விசித்திரம் நிகழ்ந்தது.
அவன் யோசித்தான்,''துறவி தினமும் தியானம் செய்ய சொல்வாரே.நாம்கூட,இப்போது என்ன அவசரம்,வயதான காலத்தில் பார்த்துக் கொள்ளலாமே என்று நினைத்தோம்.பல ஆண்டுகள் தள்ளிப் போட்டதை ஏன் இப்போது ஆரம்பிக்கக்கூடாது ?''இரண்டு தினங்களில் முழுமையான மௌனத்தில் ஆழ்ந்து விட்டான்.நான்காவது நாள்,அவன் முகம் அழகாக ,கருணை ததும்ப ஒரு ஞானி போலக் காட்சி அளித்தது.ஏழாவது நாள் வந்தது.சூரியன் மறையும் நேரமும் வந்தது குடும்பத்தினர் யாரையும் கவலைப்படக்கூடாது என்று கூறிவிட்டான்.அந்தத் தருணத்தில் துறவி அங்கு வந்தார்.அவனைக் காப்பாற்ற முடியுமா எனக் குடும்பத்தினர் துறவியிடம் கேட்டனர்.துறவி அவனிடம் சொன்னார்,''நீ சாக மாட்டாய்.இன்னும் உனக்கு நீண்ட ஆயுள் உள்ளது.நீ கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க எனக்குத் தெரிந்த வழிஇதுதான்.நான் உன்னிடம் என்னதான் சொல்லியிருந்தாலும் உன் சந்தேகம் தீர்ந்திருக்காது.எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்க முடியும் என்ற அனுபவத்தை உனக்குக் கொடுக்க விரும்பினேன்.இந்த ஏழு நாட்களும் உனக்கு அந்த அனுபவத்தைத் தந்து விட்டது.உனக்கு வேண்டிய பதில் கிடைத்து விட்டது அல்லவா?''அவன் உடனே படுக்கையிலிருந்து கீழே குதித்துதுறவியின் பாதத்தைத் தொட்டு வணங்கினான்.

***************************************************************************

சூபி ஞானி அல்பயாஜித் தனது தவ பலத்தினால் நேரடியாக சொர்க்கம் போனார்.சொர்க்கத்தின் வாயிலில் எண்ணற்ற தேவர்கள் அவருக்கு வணக்கம் செலுத்தினர்.அவர் ஆவலுடன் ''இறைவன் எங்கே?''என்று கேட்டார்.அவர்கள் வியப்புடன் கேட்டனர்,''என்ன,அவர் பூமியில் இல்லையா?''

********************************************************************************

- Partha.